»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

காம்பஸ் வைத்து வட்டம் போட்ட மாதிரி உருண்டை முகம். அதில் முயல் துறுதுறு கண்கள். தடுக்கி விழ வைக்கும் கன்னக் குழி. குளிர் காலத்து அதிகாலைப்பனி மாதிரி ஜில்லென்று இருக்கிறார் விந்தியா.

ஆனால், ரகுமான், பிரபு என்று முன்னாள் ஹீரோக்களுடன் மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறார். இளம் ஹீரோக்கள் இவரைப் புறக்கணிப்பதன்காரணம் தெரியவில்லை. ஒருவேளை இவரது அழகின் முன் தங்களது வசீகரம் அடிபட்டுப் போய்விடும் என்ற பயமோ என்னவோ!

விந்தியா ஒரு பிளாஷ்பேக்.

நாட்டுப்புற கலைஞனுக்கும், நாட்டிய மங்கைக்கும் இடையே ஏற்படும் பரிசுத்தமான காதல் கதை சங்கமம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில்விந்தியா நன்றாகவே நடித்திருந்தார். அடிக்கடி கேட்கத் தூண்டும் பாடல்கள் அமைந்த இந்தப் படத்தில் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும்வைரமுத்துவுக்கு தேசிய அளவில் பல விருதுகள் கிடைத்தன.

இந்தப் படத்தில் நாட்டிய மங்கையாக அறிமுகமான விந்தியா, நன்றாக நடனமும் ஆடியிருந்தார். ஆனால், எதிர்பார்த்த மாதிரி படங்கள் வரவில்லைதிருநெல்வேலி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

அப்புறம் வந்தது பெரிய பிரேக். இப்போது ஒருவழியாய் ரீ என்ட்ரி ஆகியுள்ளார். என் புருஷன் குழந்தை மாதிரி மற்றும் கண்ணுக்குகண்ணாக ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி விந்தியா நமக்களித்த பேட்டி:

கே: என் புருஷன் குழந்தை மாதிரி மற்றும் கண்ணுக்கு கண்ணாக ஆகிய இரண்டு படங்களிலும் பலஹீரோயின்கள் நடித்துள்ளனர். இரண்டு படங்களிலும் தேவயானி நடித்துள்ளார். அதெப்படி இந்தப்படத்தை ஒப்புக் கொண்டீர்கள்? எப்படி ரிஸ்க் எடுக்க மனம் வந்தது?

ப: இந்த இரண்டு படங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்று நான் முழுமையாக நம்பினேன். என் புருஷன் குழந்தை மாதிரி படத்தைஇயக்கிய டைரக்டர் என்னிடம் கூறுகையில், இந்தப் படத்தில் உங்களுக்கு டான்ஸர் கேரக்டர். கொஞ்சம்கிளாமராகவும், செக்ஸியாகவும் நடிக்க வேண்டும் என்றார்.

இன்னிக்கு நிலவரப்படி, ரெண்டு, மூணு ஹீரோயின்களை வைத்துப் படம் எடுத்து அவங்க ரசிகர்களையெல்லாம்தியேட்டருக்கு வரவழைக்கணும்னுதான் தயாரிப்பாளர்கள் விரும்பறாங்க.

வியாபாரரீதியா இது நல்ல டெக்னிக்கா இருக்கலாம். நான் நடிக்கும் படத்தில் பல ஹீரோயின்கள் இருந்தாலும்என்னால் நன்றாகவும், திறமையாகவும் நடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்த இரண்டு படங்களிலும் தேவயானி இருந்தாலும், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது போல்எனக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் வெளிப்படையா சொல்லப்போனா, இந்த இரண்டு படங்களில் நடிச்சதுக்கப்புறம் நானும்,தேவயானியும் ரொம்பவும் க்ளோஸ் பிரெண்ட்ஸ் ஆகி விட்டோம்.

கே: என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் க்ளாமர் ரோல் செய்திருக்கிறீர்களே?

ப: அந்த ரோல் அப்படி. நான் குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஒருபோதும் நான் கூறவில்லை. ரசிகர்களோட வரவேற்புஇருக்கும் வரை நான் கிளாமராக நடிக்கவே விரும்புகிறேன்.

கே: இன்று தமிழ் சினிமாவில் மும்பையைச் சேர்ந்த பல ஹீரோயின்கள் வந்து கொண்டிருக்கிறார்களே?

ப: நான் சுரேஷ் கிருஷ்ணாவின் சங்கமம் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது தமிழ் வார இதழ்களின் அட்டைப் படங்களில் இடம் பெற்றேன்.இது நாள் வரை எனக்கு நல்ல மரியாதை கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நான் மனிதர்களை விட கடவுளை நம்புபவள். மும்பை ஹீரோயின்களால் நான் பாதிக்கப்பட மாட்டேன்.

கே: நீங்கள் ஏன் தமிழ் படங்களில் மட்டுமே கான்சன்ரேட் செய்கிறீர்கள் விந்தியா?

ப: தமிழில்தான் நல்ல கதைகள் உள்ள நல்ல பேனர் படங்கள் எனக்குக் கிடைக்கின்றன ஆறாவது சினம், குடும்பம் ஒரு கோவில்,பூங்குயிலே, கற்றது காதல் அளவு போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இவைகள் தவிரவிஸ்வநாதன் அம்மமூர்த்தி என்ற படத்தில் அருண் பாண்டியனுடனும், இன்னொரு படத்தில் சத்யராஜ் உடனும்நடிக்கிறேன்.

கே: உங்கள் கனவு கதாபாத்திரம் எது விந்தியா?

ப: இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அதே போல் ஸ்ரீதேவி மூன்றாம் பிறையில்நடித்தது போல் நடிக்க வேண்டும் என்றும் ஆசையிருக்கிறது. எப்போது என் கனவு நனவாகும் என்பதுகடவுளுக்குத்தான் தெரியும்.

கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் விந்தியா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil