»   »  சென்சாரை பயறுத்திய விந்தியா

சென்சாரை பயறுத்திய விந்தியா

Subscribe to Oneindia Tamil

தமிழில் எடுக்கப்பட்ட காதல் பண்ணும் வயசு படம், சென்சார் அதிகாரிகளின் அதிரடி கட் காரணமாக இங்கே ரிலீஸாகாமல்நேரடியாக தெலுங்குக்குப் போகவுள்ளது.

வயசு பசங்களுக்குப் பிறகு விந்தியா படு கிளாமராக நடித்த படங்களில் ஒன்று காதல் பண்ணும் வயசு.

படத்தின் தலைப்புக்கு ஏற்ப டீன் ஏஜ் காதலை புட்டுப் புட்டு வைக்கும் படம். படத்தில் விந்தியாவுக்கு வாலிபப் பசங்களைபசலை கொள்ளச் செய்யும் வேலை. அந்த வேலையை விந்தியா திறம்படவே செய்து கொடுக்க தயாரிப்பாளருக்கு பரம திருப்தி.

ஆனால், படம் முடிந்து சென்சாருக்குப் போனபோது படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஆடிப் போய்விட்டார்களாம்.

விந்தியாவின் நடன அசைவுகள் ஆண்களுக்கே அறுவறுப்பு ஏற்படும் வகையில் இருக்க, என்ன படம் பிடித்திருக்கிறீர்கள் என்றுதயாரிப்பாளரையும் இயக்குனரையும் போட்டு பிராண்டி எடுத்துவிட்டார்களாம்.

படம் முழுக்க கட்டுக்கடங்காத இளமை சுனாமியை விந்தியா கட்டவிழ்த்து விட்டிருக்கிறாராம். இதனால் மார்க்கர் பேனாவைஎடுத்து படத்தின் அசகாய கவர்ச்சிக் காட்சிகளை மார்க் செய்து கொண்டே வந்தார்களாம் சென்சார் அதிகாரிகள்.

கடைசியில் இது மட்டும் தான் திரையில ஓட லாயக்கு என்று கூறி மிச்ச பிலிம் ரோலை அவர்கள் தந்தபோது, பாதிப் படம்காணாமல் போயிருந்தது.

அரண்டு போன தயாரிப்பாளரும் மிரண்டு போன இயக்குனரும் தமிழ்ல நாங்க ரிலீசே பண்ணலை சாமி என்று சொல்லிவிட்டுபடப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்திருக்கிறார்கள்.

இதை இப்படியே தமிழில் ரிலீஸ் செய்வது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர், படத்தை அப்படியே டப்செய்து, ஹைதராபாத்துக்குக் கொண்டு போய் தெலுங்குப் படமாக சென்சார் செய்து, அங்கு படத்தை ரிலீசும் பண்ணிவிட்டு,பின்னர் தமிழுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம்.

பாவம், கலைஞரின் கண்ணம்மா படத்தோடு இந்தப் படத்தையும் ரொம்பவும் நம்பியிருந்தார் விந்தியா. இப்போது சென்சார்போட்ட போடில் நொந்து போய்விட்டாராம்.

சினிமாவில் ஏதும் சரியாக அமையாததால் மீண்டும் டிவியில் தலைகாட்டும் வகையில் கே.பாலசந்தர் ஆகியோர் உள்ளிட்ட சிலடெலி சீரியல் புள்ளிகளை சந்தித்தும் வருகிறார் விந்தியா.

சினிமா சான்ஸ் இல்லாமல் விந்தியா அல்லாடுவதைக் கண்ட ஒரு சினிமா பார்ட்டி விந்தியாவை சந்தித்து அரவாணி என்று ஒருபடம் எடுக்கிறேன். அதில் அரவாணி கேரக்டரில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அவரைத் திட்டி அனுப்பிவிட்டாராம்விந்தியா.

கோபத்தில் கிளம்பிப் போன அந்தத் தயாரிப்பாளர், பார்க்க விந்தியாவைப் போலவே இருக்கும் ஒரு அரவாணியை பிடித்துபடப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இதனால் டென்சனில் இருக்கிறார் விந்தியா.


அது போகட்டும்... விந்தியாவுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும், விந்தியா இப்போது யாரது ரசிகை தெரியுமா? இளம் டென்னிஸ்புயல் சானியா மிர்சாவின் பரம ரசிகையாகிவிட்டாராம். அந்தப் பொண்ணு என்ன அழகு, என்ன திறமை என்று பார்ப்பவர்களிடம்எல்லாம் சானியாவை ரொம்பவும் சிலாகித்துப் பேசுகிறார் விந்தியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil