»   »  கணையம் பாதிப்பு... நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!

கணையம் பாதிப்பு... நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கணைய பாதிப்பு காரணமாக நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை விந்தியா, இப்போது அதிமுகவில் முழுநேரப் பேச்சாளராக உள்ளார்.

Vindhya hospitalised

சில தினங்களுக்கு முன் வாரணாசிக்குச் சென்றிருந்தார் விந்தியா. அங்கிருந்து சென்னைக்கு திரும்பியதிலிருந்து பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் நேற்று அவர் உடல் நிலை மோசமடைந்து, மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து கேகே நகரில் உள்ள கேஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read more about: vindhya, விந்தியா
English summary
Popular actress Vindhya has admitted in Hospital due to acute pancreatitis.
Please Wait while comments are loading...