»   »  நொந்து நிற்கும் விந்தியா

நொந்து நிற்கும் விந்தியா

Subscribe to Oneindia Tamil

விந்தியா நடித்த மூன்று படங்கள் நீண்ட காலமாக தயாரிப்பு நிலையிலேயே முடங்கிக் கிடக்கின்றன.

திருப்பதியைச் சேர்ந்த விந்தியா, சங்கமம் படத்தில் அறிமுகமானபோது இதோ திருப்பதி லட்டு என்றுஅறிமுகப்படுத்தி மகிழ்ந்தது கோடம்பாக்கம்.

துள்ளும் விழிகள், நிரம்பித் ததும்பும் அழகு என ஆர்ப்பாட்டமாய் வந்திறங்கிய விந்தியாவுக்கு அப்புறம் நடந்தகதை தான் உங்களுக்குத் தெரியுமே. சங்கமம் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் அடுத்து படம் தயாரிப்பதையேவிட்டு விலகிவிட்டார் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்.

படத்தின் பாடல்களோடு விந்தியாவும் ரொம்பவே பேசப்பட்டாலும், தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கவாய்ப்புக்கள் வராததால் விவேக் உள்ளிட்ட காமெடிகளுக்கு ஜோடி சேர்ந்தார்.

திடீரென ஒருநாள் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறினார். தன்னை தயாரிப்பாளர்களுக்கும் சில பெரியமனிதர்களுக்கு தாரை வார்க்க முயல்வதாய் குடும்பத்தினர் மீதே குற்றம் சாட்டியபடி தனது மேனேஜர் அருணுடன்தனிக்குடித்தனம் செய்தார்.

ஹீரோயின் வாய்ப்புக்கள் வராததால் வயசுப் பசங்க போன்ற படங்களில் ஷகீலா ரேஞ்சுக்கு நடிக்க ஆரம்பித்தார்.இதையடுத்து கற்றது காதலளவு, சேட்டை போன்ற படங்களிலும் உடைதானம் செய்துவிட்டு நடிக்க வாய்ப்புவந்தது. ஆனால், அந்தப் படங்களில் விந்தியாவை புக் செய்ய காட்டிய வேகத்தை படத்தை எடுப்பதில்தயாரிப்பாளர்கள் காட்டவில்லை.

சேட்டை படம் மட்டும் கொஞ்சம் வளர்ந்தது. கற்றது காதலளவு சுத்தமாக நின்று போய்விட்டது. இவற்றின்சூடேற்றும் ஸ்டில்கள் மட்டுமே பத்திரிக்கைகளின் பக்கங்களை நிரப்பின.

இந்தப் படங்கள் வெளிவருவதே சந்தேகம் என்றாகிவிட்ட நிலையில், மீண்டும் தனது வீட்டோடு ஐக்கியமானார்விந்தியா. அருணை வெட்டிவிட்டார், சினிமாவில் சான்ஸ் பிடித்துத் தர கமிஷனுக்கு சிலரை நியமித்தார். யாரும்சான்ஸ் பிடித்து வரவில்லை, இந் நிலையில் அருணை மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் விந்தியா.

படங்களில் விந்தியா நடிக்காவிட்டாலும் அவர் குறித்த கிசுகிசுக்கள் மட்டும் பஞ்சமே இல்லாமல்கோடம்பாக்கத்தை சுற்றி வந்தன. ஆனால், முன்னணியில் இல்லாததால் விந்தியா குறித்த அரசல் புரசல் செய்திகளையாரும் கண்டுகொள்ளவும் இல்லை.

இந் நிலையில் ஒசூரில் ஒரு படப்பிடிப்புக்காக சென்றபோது பைனாஸ்சியர் பார்ட்டி ஒருவர் தனது ரூம் கதவைநள்ளிரவில் தட்டியதாக விந்தியா கிளப்பிய பிரச்சனை, அவரை பலருக்கும் மீண்டும் நினைவூட்டியது.

இப்போது லிவிங்ஸ்டனுடன் பிரம்மச்சாரியின் கனவு என்ற படத்தில் நடித்து வருகிறார் விந்தியா. இந்தப் படத்தில்பிரம்மச்சாரி ஒருவரை கெடுக்கும் வேடமாம். இந்த ரோலில் பின்னி எடுத்து வருகிறாராம் விந்தியா. ஆனால், படம்எடுக்கப்படும் வேகத்தை பார்த்தால் இதுவும் வெளிவருவது சந்தேகமே என்கிறார்கள்.

தொடர்ந்து தான் நடித்த கற்றது காதலளவு, சேட்டை, பிரம்மச்சாரியின் கனவு ஆகிய 3 படங்களும் வெளி வருவதேசந்தேகம் என்றாகிவிட்டதால் நொந்து போயிருந்த விந்தியாவை ஒரு தயாரிப்பாளர் அணுகி விஜய்சாந்திபாணியில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கத் தயாரா என்று கேட்டிருக்கிறார்.

உடனே அதை ஒப்புக் கொண்டுவிட்ட விந்தியா, சண்டைப் பயிற்சியாளர் ஒருவரிடம் ஸ்டண்ட் பயிற்சி எடுக்கஆரம்பித்துள்ளார். தனக்கு எல்லாமுமான மேனேஜர் அருணே விந்தியாவுக்காக ஒரு அதிரடி ஆக்ஷன் கதையைஎழுதி வருகிறாராம்.

இந்தப் படமாவது வெளி வருகிறதா பார்ப்போம் !

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil