»   »  பல்பு எரிஞ்சுது, மணி அடிச்சது: வெட்கப் புன்னகை சிந்தும் விசாகா சிங்

பல்பு எரிஞ்சுது, மணி அடிச்சது: வெட்கப் புன்னகை சிந்தும் விசாகா சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விசாகா சிங் தனது தலையில் பல்பு எரிந்ததாகவும், மணி அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானவர் விசாகா சிங். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இது தவிர சொந்தமாக பிசினஸும் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

பிசினஸ்

பிசினஸ்

நான் படங்களில் நடிப்பது தவிர்த்து வெளிநாட்டில் பிசினஸ் செய்து வருகிறேன். பிசினஸில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.

காதல்

காதல்

நான் விக்ராந்த் ராவ் என்பவரை காதலிக்கிறேன். வெளிநாட்டில் வசிக்கும் அவரை அடுத்த ஆண்டு திருமணம் செய்யப் போகிறேன். அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்றபோது அவருடன் நட்பு ஏற்பட்டு காதலானது. இவர் தான் உனக்காக பிறந்தவர் என்று என் மனதில் மணி அடித்தது.

திருமணம்

திருமணம்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் என்பது தடை கிடையாது. நான் திருமதி ஆன பிறகு நடிக்கவும் செய்வேன், பிசினஸும் பண்ணுவேன்.

பேய்

பேய்

பயம் ஒரு பயணம் படத்தில் பேயாக நடித்தது த்ரில்லாக இருந்தது. பேய் வேடத்திற்கு மேக்கப் போடவே அதிக நேரமாகும். ரசிகர்களை பயமுறுத்த பார்த்து பார்த்து நடித்தேன்.

English summary
Actress Vishaka Singh is getting married to her NRI boyfriend Vikranth Rao in 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X