»   »  இதோ இன்னும் ஒரு "அழகிய பேய்"... விசாகா சிங்!

இதோ இன்னும் ஒரு "அழகிய பேய்"... விசாகா சிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது அழகிய பேய்களின் காலம் எனலாம். தற்போது அந்த வரிசையில் நடிகை விசாகா சிங்கும் சேர்ந்து விட்டார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை விசாகா சிங். இப்படம் வெற்றிப்படமாக அமைந்தபோதும், தமிழில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

விசாகா சிங்கின் அடுத்தபடமான வாலிபராஜா விரைவில் ரிலீசாக இருக்கிறது.

பயம் ஒரு பயணம்...

பயம் ஒரு பயணம்...

இந்நிலையில் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் விசாகா சிங். அப்படத்தின் பெயர் பயம் ஒரு பயணம்.

பேய்ப்படம்...

பேய்ப்படம்...

மணிசர்மா என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்கி வருகிறார். திகில் கலந்த பேய் படமாக உருவாகி வரும் இப்படம் பெண்களை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

அழகிய பேய்...

அழகிய பேய்...

இப்படத்தில் பேயாக விசாகா சிங் நடிக்கிறார். கதாநாயகனாக பரத் ரெட்டி நடிக்கிறார். கூடவே, மீனாட்சி தீட்சித்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மூணாறில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இறுதிக்கட்டத்தில்...

இறுதிக்கட்டத்தில்...

படம் குறித்து இயக்குனர் மணிசர்மா கூறுகையில், ‘பயம் ஒரு பயணம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.

மூணாறில் ஷுட்டிங்...

மூணாறில் ஷுட்டிங்...

இப்படத்தில் விசாகா பேயாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் மூணாறில் படமாக்கியுள்ளோம்' என்றார்.

அழகிய பேய்க்காலம்...

அழகிய பேய்க்காலம்...

அரண்மனை படத்தில் ஹன்சிகா அழகிய பேயாக நடித்தார். அதேபோல், லட்சுமிராய், ஆண்ட்ரியா, நயன்தாரா என அழகிய நாயகிகள் பலரும் பேய் வேடமேற்றனர். இந்நிலையில், இந்த பட்டியலில் தற்போது விசாகாவும் இணைந்துள்ளார்.

English summary
Vishakha Singh is currently working in a horror film titled Bayam Oru Payanam. We hear that the actress is playing a ghost in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil