»   »  கண்ணா லட்டு தின்ன ஆசையா: திருமண பந்தத்திற்குள் நுழையும் விசாகா சிங்?

கண்ணா லட்டு தின்ன ஆசையா: திருமண பந்தத்திற்குள் நுழையும் விசாகா சிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணமாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிடிச்சிருக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். பிடிச்சிருக்கு படம் காலை வாரினாலும் சில ஆண்டுகள் கழித்து தமிழில் இவர் மீண்டும் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹிட்டடித்தது.

Vishakha Singh Enters Marriage Life

சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இப்படம் விசாகா சிங்கிற்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வாலிப ராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் பெரியளவில் எடுபடவில்லை.

Vishakha Singh Enters Marriage Life

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை விசாகா மணம் புரியப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன. விசாகாவின் காதலர் விக்ராந்த் ராவ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றின் விளம்பரப்பிரிவு அதிகாரியாக பணி புரிகிறார்.

ரோம் நகரத்தில் பணிபுரியும் விக்ராந்த்-விசாகா இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

Vishakha Singh Enters Marriage Life

தற்போது இவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது. விக்ராந்த் குறித்து விசாகா '' விக்ராந்த் பழகுவதற்கு இனிமையானவர்.எனது காதல் எப்போதோ தொடங்கி விட்டது.

Vishakha Singh Enters Marriage Life

இப்போது மிகவும் ஆழமாக நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் காதல் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அவர் மிகவும் கனிவானவர். அவரை காதலனாக அடைந்தது எனது அதிர்ஷ்டம்.

என் வாழ்வில் இன்னொருவரை காதலனாக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை'' என்று கூறியிருக்கிறார். விரைவில் இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Actress Vishakha Singh Enters Wedding Life Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil