»   »  விஷால்-நயனதாரா 'கிஸ்'

விஷால்-நயனதாரா 'கிஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vishal with Nayanatara in Sathyam
சத்யம் படத்தில் விஷால், நயனதாரா பங்கேற்கும் அதிரசமான முத்தக் காட்சியை படு ரகசியமாக படமாக்கவுள்ளனராம். இதை விஷாலே தனது உதட்டால், அதாவது வாயால் தெரிவித்துள்ளார்.

விஷால், நயனதாரா முதல் முறையாக ஜோடி போடும் படம் சத்யம். விஷால் குடும்பத்தின் சொந்தத் தயாரிப்பு இது. மிடுக்கான காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் வருகிறார் விஷால். இதற்காக ஐஜி சைலைந்திர பாபுவை நேரில் சந்தித்து மிடுக்கு வருவதற்காக பல டிப்ஸ்களை கேட்டுள்ளார் விஷால்.

தலை முதல் பாதம் வரை படு டிரிம்மாக மாறியுள்ள விஷால், அச்சு அசல் துடிப்பான காவல்துறை அதிகாரியைப் போலவே இருக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயனதாரா. முதலில் திரிஷாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலகிக் கொள்ள நயனதாராவுக்கு வாய்ப்பு வந்தது.

படத்தின் பிரமாண்டமாக சண்டைக் காட்சிகளைக் கூறுகிறார்கள். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஒரு சண்டைப் பயிற்சியாளரை வரவழைத்து சண்டைக் காட்சிகளை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதவிர காதல் காட்சிகளும் படு சிறப்பாக படமாக்கப்பட்டு வருகிறதாம். குறிப்பாக விஷால், நயனதாரா கிஸ்ஸிங் காட்சிதான் ஹைலைட்டாக கூறப்படுகிறது. இந்தக் காட்சியை இன்னும் படமாக்கவில்லையாம். விரைவில் படு ரகசியமாக இதைப் படமாக்கவுள்ளனராம்.

இதுகுறித்து விஷால் கூறுகையில், காதல் காட்சிகளை படு ரசனையாக, ரகளையாக படமாக்கி வருகிறோம். குறிப்பாக உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்ளும் முத்தக் காட்சி ஒன்று படத்தில் இடம் பெறும். அதை இன்னும் படமாக்கவில்லை. ரகசியமாக வைத்துள்ளோம். அதேசமயம் இதில் ஆபாசம் இருக்காது என்றார் விஷால்.

பில்லாவில் கிளாமராக நடித்த பின்னர் நயனதாராவைத் தேடி பல கிளாமர் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் பில்லாவைப் போல கிளாமர் காட்ட முடியாது என்று மறுத்து விட்டார் நயனதாரா. இந்த நிலையில் விஷாலுடன் அவர் முத்தக் காட்சியில் நடிக்கப் போவதாக விஷாலே கூறியுள்ளதால் கோடம்பாக்கத்தில் சூடு கிளம்பியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil