»   »  தாரை தப்பட்டை வாய்ப்புக்கு விஷால் காரணமா?..வரலட்சுமி விளக்கம்

தாரை தப்பட்டை வாய்ப்புக்கு விஷால் காரணமா?..வரலட்சுமி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு விஷால் காரணமல்ல என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

சசிகுமார், வரலட்சுமி சரத்குமார், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தாரை தப்பட்டை. கரகாட்டக் கலையை மையமாகக்கொண்டு இப்படத்தை பாலா இயக்கியிருக்கிறார்.

Vishal not Reason Tharai Thappattai Opportunity says Varalakshmi Sarathkumar

இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம் என்பதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தாரை தப்பட்டை வாய்ப்பு கிடைத்ததற்கு விஷால் தான் காரணம் என்கிறார்களே? என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வரலட்சுமி "யார் இந்த மாதிரி எல்லாம் சொல்றது? இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சங்கீதா மேடம் தான் காரணம். இப்படம் நடனம் சம்பந்தப்பட்டது.

Vishal not Reason Tharai Thappattai Opportunity says Varalakshmi Sarathkumar

ஏற்கெனவே வரலட்சுமி நடனம் பயின்று இருப்பதால் பேசலாம்னு இருக்கேன் என்று பாலா சார் சொல்லியிருக்கிறார். இதை சங்கீதா மேடம் என்னிடம் சொன்னார்கள்.

பாலா சாரை நான் போய் சந்தித்தபின் சுமார் 1 மாத காலம் இதற்காக நடன பயிற்சிகளை மேற்கொண்டேன். அதன்பிறகு கிடைத்த வாய்ப்பு தான் இந்த தாரை தப்பட்டை" என்று சற்று காட்டமாகவே பதிலளித்தார்.

Vishal not Reason Tharai Thappattai Opportunity says Varalakshmi Sarathkumar

வருகின்ற ஜனவரி 14 ம் தேதி வெளியாகும் தாரை தப்பட்டை படத்தின் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் தாரை தப்பட்டைக்கு தணிக்கைக் குழுவினர் ஏ சான்றிதழ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
"Vishal not the Reason for Tharai Thappattai Opportunity" Actress Varalakshmi Sarathkumar says in Tharai Thappattai Press Meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil