»   »  விஷால் கிருஷ்ணன் வெற்றி ரகசியம்?

விஷால் கிருஷ்ணன் வெற்றி ரகசியம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எம் ஜி ஆர் ஆதரவுடன் முக்தா சீனிவாசன் தலைமையில் தொடங்கப்பட்ட அமைப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்தின் தலைவர்களாக அனுபவம் மிக்க தொழில்முறை தயாரிப்பாளர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர். விதி விலக்காக தீவிரமாக படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் பிஎஸ் வீரப்பா ஒரு முறை சங்கத்திற்கு தலைவராக இருந்துள்ளார்.

அதன் பின் குறைந்த வயதில் கதாநாயக நடிகர் விஷால் கிருஷ்ணன் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, தான் மட்டும் இன்றி தன் அணியில் போட்டியிட்ட பெரும்பான்மையான வேட்பாளர்களுடன் வெற்றி வாகை சூடியுள்ளார். வழக்கமாக பதவி ஏற்பு விழாவாக நடத்தப்படும் நிகழ்ச்சியை நிர்வாகிகள் அறிமுக விழா என அறிவித்து அனைத்து தரப்பினர் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகர் விஷால். இன்று மாலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள முதலாளிகள் குடும்ப விழாவில் முறைப்படி தன்னையும், பிற நிர்வாக குழு உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி பொறுப்பேற்க உள்ளார்.

Vishal's secret of success

தமிழ் திரைப்பட துறையில் ஜாம்பவான்களாக தொடர்ந்து மாறி மாறி குறிப்பிட்ட சிலரே இந்த அமைப்பின் தலைமை பதவிகளில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர் நடந்து முடிந்த தேர்தலில்.

மொத்த வாக்குப்பதிவும், அதில் விஷால் அணி வாங்கியுள்ள வாக்குகளை பார்க்கும் போது விஷால் அணிக்கு எதிரான மனநிலையில் வாக்களித்துள்ளார்கள். நடிகர்கள் சங்கத் தலைமைக்கு தேர்வு ஆகிவிட கூடாது என்று பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் கூறி வந்தாலும் தேர்தலில் தயாரிப்பாளர்கள் இரு அணிகளாக பிளவுபட்டு போட்டியிட்டதால் விஷால் வெற்றி பெற்றார. விளையாட்டாக தேர்தல் களத்தில் குதித்த விஷால் தனக்கு எதிராக தயாரிப்பாளர்கள் பிளவுபட்டு இருப்பதை தனக்கு சாதகமாக்கநடிகர் சங்கத்தில் தான் வெற்றி பெற அரசியல்வாதியும், நடிகருமான ஜேகே ரித்திஷ் கற்று தந்த பார்முலாவை கையாண்டார்.

இங்கு அவருக்கு உதவிகரமாக இருந்தவர் அரைக்கால் டவுசர் பிரபலம் ஞானவேல் ராஜா. இவருக்கு தேர்தல் களத்தில் தயாரிப்பாளர்களை எப்படி கவனித்தால் வாக்குகள் அச்சு பிசகாமல் தனக்கு கிடைக்கும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்தவர். தமிழர்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையும், முதல் மரியாதையும் கொடுக்கத் தவறமாட்டார்கள். பால் குடித்த வீட்டுக்கு பாதகம் பண்ண மாட்டார்கள். கை நீட்டி விட்டால் கடுகளவு கூட மனம் மாற மாட்டார்கள். இந்த மூன்று பார்முலாவையும் கடுமையாக அமல்படுத்த தலைமை தாங்கியவர் அனுபவசாலி ஞானவேல்ராஜா.

வேட்பு மனு தாக்கல் செய்த போது தங்கள் அணி வேட்பாளர்களை இறுதிப்படுத்தி, உறுதி செய்து அறிவித்தார் நடிகர் விஷால். மற்ற அணிகள் தேர்தல் நெருங்கும் வரை வேட்பாளர்களை, உறுதி செய்வதற்கும் அணிகளை இணைக்கும் வேலைகளில் இருந்தனர். விஷால் அணியோ 10 வருடங்களுக்கு முன்பு படம் தயாரித்தவர்கள், இனிமேல் தயாரிப்பு துறைக்கு வர மாட்டார்கள் என பட்டியலை தயார் செய்தனர். அதே போல் வெளியூரில் செட்டில் ஆன தயாரிப்பாளர்கள் என பட்டியல் தயாரானது. முதலில் வீடு தேடி வந்தவனை வெறுங்கையுடன் அனுப்புவது கொடுத்து வாழ்ந்த மக்களிடம் இல்லை. அதே போல் பிறர் வீட்டுக்கு போகும் போது வெறுங்கையுடன் யாரும்போவது இல்லை. வசதிக்கேற்ப பலகராங்கள் பார்சல் இருக்கும். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகன் தலைமை பதவிக்கு வர வாக்கு கேட்டு போகும் போது அரசியல்வாதியெல்லாம் இவர்களிடம் பாடம் பயில வேண்டும். அப்படி ஒரு திட்டமிட்ட நடைமுறையை அமுல்படுத்தினார்கள் என்கிறார் நேரடி அனுபவம் பெற்ற தயாரிப்பாளர் ஒருவர்.

வாக்காளரைச் சந்திக்க முன் அனுமதி பெற்றனர். மீண்டும் நீங்கள் படம் தயாரிக்க நாங்கள் வெற்றி பெறுவது அவசியம் என்ற வேண்டுதல் வைக்கப்பட்டது. கால்ஷீட் கொடுக்க வேண்டிய நடிகனே இப்படி ஒரு வாக்குறுதியை கொடுத்து, தட்டில் இனிப்பு வைத்து வழிச் செலவுக்கு வைத்து கொள்ள சொல்லி, குடும்பத்துடன் வாக்களிக்க வாருங்கள் என்ற நடிகனின் அழைப்பு வேலை செய்தது. இதற்கான அனைத்து செலவுகளுக்கும் சில முன்னணி நடிகர்களும், பைனான்சியர்களும் ஸ்பான்சர்களாக இருந்ததாக கூறப் பாடுகிறது.

இந்த பார்முலாவில் 350 வாக்குகளை உறுதிப்படுத்திய விஷால் அணி, எதிர் அணி விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதைத் தவிர்த்தார்கள். ஞானவேல் ராஜா மூலம் பொது மேடையில் தனி மனித விமர்சனங்களை அநாகரிக வார்த்தைகளில் அரங்கேற்றியது. இதனால் எதிர் அணியினர எரிச்சல் அடைந்து தாங்கள் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தவிர்த்து, நடிகன் தலைவராக கூடாது என எதிர் பிரச்சா ரம் செய்து விஷாலை பிரபலபடுத்தும் வேலையைச் செய்தனர். எதிர் அணியினரின் லாவணி கச்சேரியில் எரிச்சல் அடைந்த நடுநிலையான வாக்காளர்கள் 10 சதவீதம் பேர் மௌனமாக இருந்த விஷால் அணியை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆதரித்ததன் விளைவு விஷால் அணிக்கு வெற்றி எளிதானது.

ஜனநாயக தேர்தல் திருவிழாவில் வெற்றி மட்டுமே முக்கியம். அது எந்த வழியில் என்பது முக்கியமல்ல என்பதை முன் அனுபவமாக பெற்ற ஞானவேல் ராஜா மற்றும் விஷால் இருவரும் திருமங்கலம் இடைத் தேர்தல் பார்முலாவை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்கின்றனர் மூத்த தயாரிப்பாளர்கள்.

எது எப்படியோ தேர்தல் வெற்றிக்கு அறிவை உபயோகப்படுத்தியதை தயாரிப்பாளர்களின் முன்னேற்த்திற்கு இந்த இளைஞர்கள் பயன்படுத்தினால் நல்லது என்பதே தயாரிப்பாளர்களிடம் இன்றைய பேச்சு!

-ராமானுஜம்

English summary
Here is an analysis of Vishal's background work to win the Producers council election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil