twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் சூடுபிடிக்கும் விஜே சித்ரா தற்கொலை வழக்கு.. பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரான கணவர் ஹேமந்த்!

    |

    சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

    பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா.

    அருண் விஜய்யின் அண்ணனாக மாறிய சமுத்திரக்கனி.. அப்போ பிரகாஷ் ராஜ்? அருண் விஜய்யின் அண்ணனாக மாறிய சமுத்திரக்கனி.. அப்போ பிரகாஷ் ராஜ்?

    மக்கள் டிவியில் தொகுப்பாளராக கேரியரை தொடங்கிய சித்ரா சன்டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளளார் சித்ரா.

    கணவருடன் தகராறு - தூக்கிட்டு தற்கொலை

    கணவருடன் தகராறு - தூக்கிட்டு தற்கொலை

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமானார் சித்ரா. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவர் ஹேமந்துடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு காரணம் கணவர்தான் - கைது

    தற்கொலைக்கு காரணம் கணவர்தான் - கைது

    தனது கணவரான ஹேமந்த் உடன் இருந்தபோதே அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விமர்சையாக திருமணம் செய்ய திட்டம்

    விமர்சையாக திருமணம் செய்ய திட்டம்

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹேமந்தை இரு வீட்டர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டார் சித்ரா. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்களின் திருமணத்தை விமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்தார் சித்ரா. இதற்காக திருமண மண்டபத்திற்கும் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டது. பதிவு திருமணம் செய்து கொண்டதால் கணவர் வீட்டிலும் கணவருடன் அவ்வப்போது ஹோட்டலிலும் தங்கியிருந்தார் சித்ரா.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் வந்த பிரச்சனை

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் வந்த பிரச்சனை

    தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பங்கேற்றார் சித்ரா. ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்து தனது கணவர் ஹேமந்துடன் காரில் திரும்பியுள்ளார். அப்போதே ஹேமந்துக்கும் சித்ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் இணைத்து சந்தேகப்பட்டுள்ளார் ஹேமந்த்.

    நாளுக்கு நாள் அதிகமான சந்தேகம்

    நாளுக்கு நாள் அதிகமான சந்தேகம்

    நாளுக்கு நாள் அவரது சந்தேகம் அதிகமானதால், மன உளைச்சலில் இருந்த சித்ரா, ஹோட்டல் அறைக்கு வந்ததும் தனது கணவர் ஹேமந்தை வெளியே அனுப்பிவிட்டு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் சித்ராவின் கழுத்து மார்பு தாடை ஆகிய இடங்களில் இருந்த காயங்கள் சந்தேகத்தை எழுப்பியது. மேலும் அவரது முகத்தில் நகக்கீறல்களும் இருந்ததால் சந்தேகங்கள் வலுத்தன.

    சித்ரா உடம்பில் காயங்கள் நகக்கீறல்கள்

    சித்ரா உடம்பில் காயங்கள் நகக்கீறல்கள்

    பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் சித்ராவின் முகத்தில் இருந்த காயங்கள் மற்றும் நகக்கீரல்கள் அவருடையதுதான் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் ஹேமந்த் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டதும், ஆபாசமாக பேசியதுமே அவரது தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது.

    ஹேமந்த் கைது.. சிறை.. ஜாமீன்

    ஹேமந்த் கைது.. சிறை.. ஜாமீன்

    இதனை தொடர்ந்து ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் செய்து இரண்டு மாதங்களுக்குள் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த்துக்கு பின்னர் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் மதுரையில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டது.

    பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரான ஹேமந்த்

    பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரான ஹேமந்த்

    இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். ஹேமந்த் தனது வழக்கறிஞர்கள் இருவருடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகையான சித்ரா சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கால்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

    விஜய் டிவி வழங்கிய மக்களின் நாயகி விருது

    விஜய் டிவி வழங்கிய மக்களின் நாயகி விருது

    ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள்ளேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணத்திற்கு பிறகு நடைபெற்ற விஜய் டிவி விருது விழாவில் சித்ராவுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவருக்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress VJ Chitra committed suicide by hanging herself in December last year due to a dispute with her husband. The incident in which she committed suicide while staying at a hotel with her husband caused a great stir. Hemant, Chitra's husband, appeared in the Poonamallee court yesterday. Videos of Hemant coming out of court with two of his lawyers have gone viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X