»   »  என் அப்பாதான் ரோல் மாடல்... அப்பாவை பற்றி விஜய் டிவி விஜே ரம்யா

என் அப்பாதான் ரோல் மாடல்... அப்பாவை பற்றி விஜய் டிவி விஜே ரம்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் அப்பாதான் என் ரோல்மாடல்... என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையில் இருந்து என்னை காத்தவர். என்னுடைய முடிவுக்கு ஆதரவாக இருந்து என்னை பாதுகாப்பாக வழி நடத்தி வருகிறார் என்று விஜய்டிவி விஜே ரம்யா கூறியுள்ளார்.

அப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இப்படத்தில் மூன்று விதமான அப்பாக்களைப் பற்றிய கதைக்களத்தை அவர் கையாண்டிருக்கிறார். விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது அப்பா திரைப்படம்.

சமுத்திரக்கனியின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலகப் பிரபலங்கள் தங்களது அப்பா குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இளையராஜா, நடிகர் சிவகுமார், நடிகை அபிநயா, உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களின் அப்பாவை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா தனது தந்தை சுப்ரமணியம் பற்றியும், தனக்கு எந்த அளவிற்கு தன் தந்தை பக்க பலமாக இருந்து வருகிறார் என்பது பற்றியும் பேசியுள்ளார். தான் ரம்யா என்று அழைக்கப்படுவதை விட ரம்யா சுப்ரமணியம் என்று அழைக்கப்படுவதையே பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளார் ரம்யா.

அப்பா பற்றி ரம்யா பேசிய வீடியோவை நீங்களும் பாருங்களேன்.

English summary
Ramya speaks about her father in support of Director Samuthirakani's upcoming Tamil film "Appa".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil