»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

முன்பு "மைக்" மோகன் என்று ஒரு நடிகர் இருந்தார், நியாபகம் இருக்கிறதா?. மோகன் அவரது சொந்தக் குரலில்தான் படத்தில் பேசி வருகிறார் என்றுபலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு நாள் மோகன் வித்தியாசமான குரலில் பேசினார். அப்போதுதான் தெரிந்தது, அவருக்கு இத்தனைநாட்களாக இரவல் குரலாக இருந்தது எஸ்.என்.சுரேந்தர் என்று.

ஏதோ மனஸ்தாபம் காரணமாக மோகனுக்கு குரல் கொடுக்க மாட்டேன் என்று சுரேந்தர் குரல் கொடுக்கவே, அதற்குப் பிறகு மோகனுடையமார்க்கெட்டே டவுன் ஆனது. அதற்குப் பிறகு ஆளையே காணோம். அந்த அளவுக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு குரல் ஒரு நடிகனின் வாழ்க்கையையேமாற்றியது.

இப்போது அதே கதை மறுபடியும் நடந்து வருகிறது. சிம்ரனுக்கும், ஜோதிகாவுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றிக்கு சவீதா என்ற பெண்ணின் குரலும்மிக முக்கியக் காரணம். ஹஸ்கி வாய்சில் அவர் பேசுவதே சுகம் தான்.

இந்த இரு நடிகைகளுக்கும் சவீதாவின் குரல்கன கச்சிதமாக பொருந்தியதோடு, தத்ரூபமாக பேசி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, இரு நடிகைகளுக்கும் நல்ல பெயர்வாங்கிக் கொடுத்தார்.

குறிப்பாக வாலி படத்தில் சிம்ரனின் நடிப்பை விட சவீதாவின் குரல்தான் அதிகமாக பேசப்பட்டது.

அதேபோல, ஜோதிகாவுக்கும் சவீதாவின் குரல் மிகவும் அழகாக பொருந்தியது. ஜோதிகாவின் சுட்டித்தனத்தை பிரபலப்படுத்தியது சவீதாவின் குரல்தான்.

இப்போது சிம்ரனுக்கும், ஜோதிகாவுக்கும் குரல் கொடுக்க மாட்டேன் என்று சவீதா கூறி விட்டாராம். இதனால் தொண்டை இருந்தும் குரல் இழந்துபுலம்பிக் கொண்டிருக்கிறார்களாம் சிம்ரனும், ஜோதிகாவும்.

குரல் வாபஸுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. 123 படத்தில் ஜோதிகாவுக்கு, டிவி நடிகை தீபா வெங்கட்தான் குரல் கொடுத்துள்ளாராம்.

"மைக்" மோகன் கதையை சொன்னதற்கு இப்போது காரணம் புரிந்திருக்குமே !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil