twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிஜத்திலும் 'சர்கார்' செய்ய விரும்பும் வரலட்சுமி: நீ நடத்துமா ராசாத்தி

    By Siva
    |

    சென்னை: அரசியலுக்கு வந்து ஒரு ரவுண்டு வருவது என்று முடிவு செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

    சினிமா துறையை பொருத்த வரை வரலட்சுமி சரத்குமாரின் வழியே தனி வழி. ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டார். சரத்குமார் பொண்ணு என்று கூறி பந்தா காட்ட மாட்டார்.

    வில்லி கதாபாத்திரம் கொடுத்தால் முகம் சுளிக்காமல் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெறுவார்.

    சமூக பிரச்சனை

    சமூக பிரச்சனை

    சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் உன்னை அறிந்தால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் வரலட்சுமி. ஏற்கனவே சக்தி என்ற அமைப்பை துவங்கி பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதை எல்லாம் பார்த்தவர்கள் அவர் அரசியலுக்கு வரத் தான் இந்த வேலைகளில் ஈடுபடுகிறார் என்றார்கள்.

    அரசியல்

    அரசியல்

    அரசியலுக்கு வருவீர்களா என்று நடிகைகளிடம் கேட்டால், அய்யோ நானா இல்லவே இல்லை என்பதே பலர் அளிக்கும் பதில். இந்நிலையில் வரலட்சுமி வித்தியாசமான பதிலை அளித்துள்ளார். அதாவது 5 ஆண்டுகளில் அரசியலுக்கு வரப் போவதாக தெரிவித்துள்ளார். சினிமாவை போன்றே அரசியலிலும் வித்தியாசமானவராக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

    வரலட்சுமி

    வரலட்சுமி

    வரலட்சுமியின் நெருங்கிய நண்பரான விஷாலும் சமூக பிரச்சனையை தீர்த்து வைக்கும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கும் வருகிறார். சினிமா துறையை போன்றே அரசியலிலும் இருவரும் நண்பர்களாக இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவார்களா?

    அப்பா

    அப்பா

    அப்பா வழியில் நடிக்க வந்த வரலட்சுமி அடுத்ததாக அவர் வழியில் அரசியலில் குதிக்க உள்ளார். சரத்குமார் மகள் என்ற அங்கீகாரம் போய் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற விரும்புகிறார் வரு. தந்தையுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலட்சுமியின் அலட்டல் இல்லாத குணத்திற்கு அவருக்கு அரசியல் நிச்சயம் செட்டாகும்.

    English summary
    Actress Varalaxmi Sarathkumar said that she will enter politics after five years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X