»   »  அய்யய்ய்யே..அழகாக இருக்க தமன்னா இதையா குடிக்கிறார்?

அய்யய்ய்யே..அழகாக இருக்க தமன்னா இதையா குடிக்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அழகாக இருக்க காபியில் வெண்ணெய்யை கலந்து குடிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தமன்னா நடிப்பு மற்றும் அழகு பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

பலம்

பலம்

சிக்கென்ற உடல் தான் எனது பலம் ஆகும். நடிக்க வந்தபோது இருந்தது போன்றே தற்போதும் உள்ளீர்களே, உங்கள் அழகின் ரகசியம் என்னவென்று கேட்கிறார்கள். நான் காபியில் வெண்ணெய்யை கலந்து குடிக்கிறேன்.

உணவு

உணவு

நான் நிறைய காய்கறி சாப்பிடுவேன். முட்டையும் சாப்பிடுவேன். பருப்பு வகைகளை தவிர்க்கிறேன். தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். இதுவே என் அழகின் ரகசியம் ஆகும்.

புடவை

புடவை

வீட்டில் இருக்கும்போது மேக்கப் போட மாட்டேன். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு புடவையில் செல்வேன். புடவை தான் வசதியான உடை. சினிமா உலகில் மனதில் தோன்றுவதை மறைத்து சிரித்து பேச வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.

திருமணம்

திருமணம்

நான் திரையுலகில் யாரையும் காதலிக்கவில்லை. என் மனதிற்கு பிடித்தவரை பார்த்தால் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்வேன். இல்லை என்றால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன்.

English summary
Actress Tamanna has revealed her beauty secrets. Milk white beauty is drinking coffee with butter to look great.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil