»   »  கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட் ஹீரோயின்களில் நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்குகிறார்.

நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் வந்ததில் இருந்தே அவரது கெரியர் டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது. அவர் என்ன தான் பட விழாக்களுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

கோலிவுட்டில் எந்தெந்த நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா?

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா காட்டில் வாய்ப்பு மழை பெய்வதால் அதை பயன்படுத்தி அவர் ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ரசிகர்களிடையே மவுசு அதிகம் இருப்பதால் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் தொகையை கொடுக்கிறார்கள்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஹீரோ ரேஞ்சுக்கு வீரம் காட்டி நடிக்கும் அனுஷ்கா ரூ. 3 கோடி மற்றும் அதற்கும் மேல் வாங்குகிறார். தெலுங்கு திரையுலகில் அனுஷ்கா வெற்றி நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா, ஸ்ருதி

சமந்தா, ஸ்ருதி

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா ஒரு படத்திற்கு ரூ. 1.5 கோடி வாங்குகிறார். தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் நடிக்கும் ஸ்ருதி ஹாஸன், தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் தலா ரூ.1.5 கோடி சம்பளம் பெறுகிறார்கள்.

த்ரிஷா

த்ரிஷா

நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து ஹீரோயினாகவே உள்ள த்ரிஷா படம் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை கேட்கிறாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான் த்ரிஷாவின் நிறைவேறாத ஆசையாக உள்ளது.

English summary
Nayanthara is the highest paid actress in Kollywood followed by Anushka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil