»   »  வீடு புகுந்து தாக்கப்பட்டாரா நயன்தாரா?

வீடு புகுந்து தாக்கப்பட்டாரா நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை நயன்தாராவை அவரது சென்னை அபார்ட்மென்டுக்குள் புகுந்து சிலர் கடுமையாகத் தாக்கிவிட்டதாக ஏக பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி வந்த நயன்தாரா, சென்னை கோயம்பேடு அருகே ஒரு ஃப்ளாட் வாங்கி குடியேறிவிட்டார்.

Was Nayanthara attacked severely?

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி மர்ம நபர்கள் சிலர் நயன்தாராவின் வீட்டிற்குல் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது.

அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நயன்தாரா தங்கியுள்ள அபார்ட்மெண்டில் விசாரித்தபோது, இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறினர். நயன்தாராவின் வீட்டு காவலர்களிடம் விசாரித்தபோது, 'இதெல்லாம் பொய்யான செய்திகள். காரணம் மேடம் கடந்த மூன்று தினங்களாக ஹைதராபாதில் ஷூட்டிங்கில் இருக்கிறார். யாரோ தேவையில்லாமல் கிளப்பிய வதந்திகள் இவை," என்றார்.

English summary
Sources from Nayanthara side ruled out the rumour that actress Nayanthara was severely attacked by some unknown persons at her Chennai apartment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil