»   »  டர்ட்டி பாலிடிக்ஸ்: பெட்ரூம் சீனில் போல்டாக நடித்த மல்லிகா ஷெராவத்

டர்ட்டி பாலிடிக்ஸ்: பெட்ரூம் சீனில் போல்டாக நடித்த மல்லிகா ஷெராவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் மூத்த நடிகரான ஓம்பூரியுடன் படுக்கை அறை காட்சிகளில் நடிகை மல்லிகா ஷெராவத் போல்டாக நடித்தாரம் இதனை அந்த படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

அவருடைய நடிப்பை பார்த்து அசந்து போன இயக்குநர் தன்னுடைய அடுத்த படத்திலும் மல்லிகாவிற்கே வாய்ப்பு கொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய நர்ஸ் பன்வாரி தேவி கொலை விவகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் டர்ட்டி பாலிடிக்ஸ்.

இந்த படத்தில் மூத்த நடிகர்களான ஓம்பூரி, அனுபம் கெர்,நஸ்ருதீன்ஷா, அந்தோஸ் ராணா ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மல்லிகா ஷெராவத். மூத்த நடிகர்களுடன் எல்லாம் ரொம்ப அநாயாசமாக நடித்துள்ளாராம் மல்லிகா.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

படத்தில் வெள்ளை உடை அணிந்த அரசியல்வாதிகளின் கருப்பு பக்கங்கள் தோலுருத்து காட்டப்பட்டுள்ளதாம். படுக்கையறை காட்சிகள் அதிகம் உள்ளதாம்.

போல்டாக நடித்த மல்லிகா

போல்டாக நடித்த மல்லிகா

இந்த படத்திற்கு படுக்கையறை காட்சிகள்தான் முக்கியம் என்று இயக்குநர் கூறவே தயக்கம் ஏதும் இன்றி நடித்தாராம் மல்லிகா.

கொஞ்சம் சங்கடம்தான்

கொஞ்சம் சங்கடம்தான்

மிகப்பெரிய நடிகரான ஓம்பூரியுடன் அந்த காட்சியில் நடித்த போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் என்னுடைய சங்கடத்தினை போக்கினார் என்கிறார் தில் மல்லிகா.

அனுஷ்கா தேவி

அனுஷ்கா தேவி

இந்த படத்தில் மல்லிகாவின் பெயர் அனுஷ்கா தேவியாம். ஏழையாக இருந்தாலும் உயர்ந்த லட்சியத்தோடு இருக்கும் அந்த பெண் தன்னுடைய உடலை மூலதனமாக கொண்டு அரசியல்வாதிகளை வீழ்த்தி தன்னுடைய லட்சியத்தை அடைந்தாரா என்பதுதான் படத்தின் கதையாம்.

நல்ல ஒத்துழைப்பு

நல்ல ஒத்துழைப்பு

மல்லிகா ஒரு அற்புதமான நடிகை என்று டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் இயக்குநர் கே.சி.பொகாடியா கூறியுள்ளார். அவருடைய நடிப்புத்திறமையை பார்த்து என்னுடைய அடுத்த படத்திலும் நடிக்க வைக்கப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரொம்ப போல்டுதான்

ரொம்ப போல்டுதான்

மல்லிகாவின் போல்டான நடிப்பை பார்த்து தசாவதாரம் படத்தில் நம்ம உலக நாயகன் கமல்ஹாசனே பாராட்டினாரே, பொகாடியா பாராட்டாம விடுவாரா?

English summary
Actress Mallika Sherawat has done bold scenes for various films in the past, but she says she was not at ease performing bold sequences with veteran actor Om Puri in 'Dirty Politics'. The 'Murder' fame actress was present at the trailer launch of the film Sunday, with the entire cast.
Please Wait while comments are loading...