ஸ்ருதிஹாசனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? இல்லையா?...உண்மையை உடைத்த காதலர்

சென்னை : ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா என்பது பற்றியும் அவரது காதலர் சாந்தனு ஓப்பனாக பேட்டி அளித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், நடிகை, பின்னணி பாடகி, இசைக் கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் 2020 ம் ஆண்டு சாந்தனு ஹசாரிக்கா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருவதாக அறிவித்தார். இவர்கள் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலானது.

லிவ்விங் டூகெதரில் ஸ்ருதிஹாசன்

லிவ்விங் டூகெதரில் ஸ்ருதிஹாசன்

அதற்கு பிறகு 2020 ம் ஆண்டு கொரோனா லாக்டவுன் சமயத்தில் இருவரும் மும்பையில் உள்ள ஸ்ருதியின் வீட்டில் ஒன்றாக வசிக்க துவங்கினர். காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்களையும் ஸ்ருதி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். தற்போது வரை இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டூ கெதர் உறவில் வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணம் ஆகிடுச்சா, இல்லையா

திருமணம் ஆகிடுச்சா, இல்லையா

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாந்தனுவிடம், ஸ்ருதிஹாசன் உடனான உறவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு ஓப்பனாக சாந்தனு சொன்ன பதில் தான் தற்போது மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது. சிலர், அவர் என்ன சொல்ல வருகிறார். ஏன் இப்படி குழப்புகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என்னங்க சொல்ல வர்றீங்க

என்னங்க சொல்ல வர்றீங்க

சாந்தனு கூறுகையில், ஆக்கபூர்வமாக எங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அதுவே எங்களுடைய உறவு எவ்வளவு பலமானது என காட்டி விட்டது. நாங்கள் ஆக்கப்பூர்வமானவர்கள். இருவரும் இணைந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களை உருவாக்கி வருகிறோம் . அது தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். திருமணம் நடக்குமா, எப்போது நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் உற்சாகமான ஜோடி

நாங்கள் உற்சாகமான ஜோடி

ஸ்ருதி என்னை பல வகைகளிலும் ஊக்கப்படுத்தி உள்ளார். உண்மையில் நாங்கள் மிகவும் உற்சாகமான ஜோடி. வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்பட்டுள்ளோம். என்னுடைய துறையிலேயே எனக்கு ஆக்கப்பூர்வமான, ஊக்கமளிக்கும் ஒரு துணை இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. தினமும் புதுவிதமான பலவகையான எண்ணங்கள், முன்னேற்றங்கள் வருகிறது. எனது துணையுடன் இப்படி ஒரு பிணைப்பை கொண்டிருப்பது ஒரு கலைஞராக எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது என்றார் சாந்தனு.

ஐ லவ் யூ சொன்ன முதல் பெண்

ஐ லவ் யூ சொன்ன முதல் பெண்

ஸ்ருதிஹாசனும், சாந்தனுவும் 2018 ம் ஆண்டு முதல் பழகி வருகின்றனர். 2020 ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் வசித்து வரும் இவர்களின் உறவு நாளுக்கு நாள் பலமடைந்து வருவதாக இந்த ஜோடி கூறி வருகின்றனர். தன்னிடம் ஐ லவ் யூ சொன்ன முதல் பெண் ஸ்ருதி தான் என சாந்தனுவே பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X