»   »  ‘மூன்று முடிச்சு’ என் வாழ்க்கையை மாற்றியது...: ஸ்ரீதேவி

‘மூன்று முடிச்சு’ என் வாழ்க்கையை மாற்றியது...: ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபுதாபி: பாலசந்தர் இயக்கத்தில் தான் நடித்த ‘மூன்று முடிச்சு' படம் தன் வாழ்க்கையையே மாற்றி அமைத்ததாக நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

உடல்நலக் கோளாறால் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நேற்று காலமானார். அவருக்கு வயது 84.

அன்னாரது இறுதிச் சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக திரையுலக கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கே.பாலசந்தருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், விடுமுறைக்காக துபாய் சென்றுள்ள நடிகை ஸ்ரீதேவி டுவிட்டர் வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

ரசிகர்கள் மனதில் வாழ்கிறார்...

ரசிகர்கள் மனதில் வாழ்கிறார்...

"பாலசந்தர் சார் மறைந்து விட்டார். பாலசந்தர் இறந்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வழிகாட்டி...

வழிகாட்டி...

எங்களுக்கு நடிக்க வாய்ப்பு அளித்தும், வழிக்காட்டியாகவும் இருந்தவர் அவர். அவருடைய படங்களும், அவர் எடுக்கும் முடிவுகளும் வலுவானவை.

மூன்று முடிச்சு...

மூன்று முடிச்சு...

ஒரு நாள் ஒரு குழந்தை நட்சத்திரத்தை கதாநாயகியாக முடிவு செய்தார். 'மூன்று முடிச்சு' என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

அவரது நிழலில் வளர்ந்தவர்கள்...

அவரது நிழலில் வளர்ந்தவர்கள்...

தமிழ் சினிமாவும், நாங்களும் அவரது நிழலில் தான் வளர்ந்தோம். நம் மனங்களில் அவர் எப்போதும் வாழ்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Actress Sridevi has said that she was grown in the shadow of k.Balachander.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil