»   »  கீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும்

கீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ பட நாயகி கீர்த்தி சுரேஷ் வீட்டில் கல்யாண மேளச்சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. காதல் என்றார்கள் அதற்குள் கல்யாணமா என்று அதிர்ச்சி அடையாதீர்கள் ரசிகர்களே கல்யாணம் கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதிக்காம்.

'ரஜினிமுருகன்' வெற்றிப்படத்தை தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ', இளைய தளபதி விஜய்யுடன் 'விஜய் 60', தனுஷுடன் 'தொடரி', முத்தையா படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா என கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

wedding bells ringing at keerthy suresh home

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான அவருக்கும் காமெடி நடிகருக்கும் காதல் என்று கொளுத்தி போட்டார்கள். இப்போது கல்யாணம் என்று கூறுகிறார்களே எல்லாம் பட வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்காக போட்டியாளர்கள் கையாளும் யுக்தியோ என்ற பேசப்பட்டது.

நிஜமாகவே கீர்த்தி சுரேஷ் வீட்டில் கல்யாண மேளச்சத்தம் கேட்கிறதாம். கீர்த்தி வீட்டில் அவரது உடன்பிறந்த சகோதரி ரேவதி சுரேஷுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாம்.

மணமகன் நிதின் மனோகர், சட்டம் மற்றும் மனித உரிமை தணிக்கையாளராக உள்ளார். கீர்த்தியை போல அவரது அக்கா ரேவதி சுரேஷும் திரைப்படத்துறையில் விஷுவல் டிசைனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் செப்டம்பர் 8 ஆம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் திருமணம் எளிமையாக நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையில் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரபல நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அப்போ கீர்த்தி சுரேஷ் ரூட் கிளியர்தான்!

English summary
Wedding bells in Keerthy's home. Keerthy's elder sister Revathy Suresh is going to get married on September 8 at Guruvayoor, Kerala. A Reception has been scheduled to take place in Chennai on September 11.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil