»   »  நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்பேன்: சோனாக்ஷி ஆவேசம்

நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்பேன்: சோனாக்ஷி ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் குடும்பத்தார், நெருக்கமானவர்கள் பற்றி ஏதாவது அவதூறு வரும்போது தான் நாக்கை பிடுங்கிக் கொள்ளும் வகையில் நாலு வார்த்தை கேட்க வேண்டியுள்ளது என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் பூசினாற் போன்று உள்ள சோனாக்ஷி சின்ஹாவை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் அவரின் நெற்றியை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள் நெட்டிசன்கள்.

நீங்கள் எவ்வளவு மீம்ஸ் போட்டாலும் சரி, கிண்டல் செய்தாலும் சரி நான் இப்படித் தான் என தில்லாக இருப்பவர் சோனாக்ஷி. இந்நிலையில் தான் அவரின் திருமணம் பற்றிய வதந்தி அவரை கோபம் அடைய வைத்துள்ளது.

சோனாக்ஷி

சோனாக்ஷி

சோனாக்ஷி சின்ஹாவுக்கும், சல்மான் கானின் தம்பி சொஹைலின் மைத்துனர் பன்ட்டி சச்தேவாவுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தி புகைப்படத்துடன் தீயாக பரவியதை பார்த்து சோனாவுக்கு கோபம் வந்துவிட்டது.

மூக்கை நுழைக்காதீங்க

மூக்கை நுழைக்காதீங்க

நான் யாரை காதலிக்கிறேன், யாரை திருமணம் செய்யப் போகிறேன் என்று பிறர் கவலைப்படத் தேவையில்லை. என் தனிப்பட்ட விஷயத்தில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்கிறார் சோனாக்ஷி.

நாலு வார்த்தை

நாலு வார்த்தை

என்னை பற்றி, என் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி யார் என்ன கூறினாலும் நான் கண்டுகொள்வது இல்லை. ஆனால் என் குடும்பத்தார், எனக்கு நெருக்கமானவர்களை பற்றி ஏதாவது கூறினால் தான் நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டியுள்ளது என்று சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.

பாடம் கற்றுக் கொடுப்பேன்

பாடம் கற்றுக் கொடுப்பேன்

நான் எதையும் சீரியஸாக எடுக்காமல் மன்னித்துவிடுவேன். யாராவது என்னிடமோ, என் அன்புக்கு உரியவர்களிடமோ மோசமாக நடந்தால் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம் கற்றுக் கொடுப்பேன் என்று சோனா கூறியுள்ளார்.

English summary
Bollywood actress Sonakshi Sinha said that she won't leave people who gossip about her family and loved ones alone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X