»   »  உனக்கு வரலாறே தெரியலையே கார்த்தி, போய் உங்கப்பாவிடம் கேளு: ராதிகா

உனக்கு வரலாறே தெரியலையே கார்த்தி, போய் உங்கப்பாவிடம் கேளு: ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணங்களை அளிக்கவில்லை என்றால் உங்களிடம் கொடுத்தது என்ன காதல் கடிதங்களா என நடிகை ராதிகா நடிகர் கார்த்தியிடம் கேள்வி கேட்டுள்ளார்.

நடிகர் சங்கத்தில் இரு்து முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சட்டப்படி பார்த்துக் கொள்வதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் மனைவி ராதிகா இது பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அப்பா

கார்த்தி வரலாற்றில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் தந்தையிடம் கேளுங்கள். தனிப்பட்ட விரோதத்தால் எதையும் தீர்மானிக்க வேண்டாம்.

ஆதாரம்

கார்த்தி, சங்கத்தின் ஆட்டிடரிம் இருந்து என்ஓசி வாங்கினீர்களா? எதையாவது நிரூபித்துள்ளீர்களா? சும்மா குற்றம்சாட்டுவது. நீங்கள் தான் எதையும் தீர்மானிக்கும் இறுதி நபரா?

காட்டு

கார்த்தி, அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து, சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரிடம் ஆதாரங்களை அளியுங்கள். பாடுபட்டவர்கள் மீது சும்மா புகார் கூறி அவதூறாக பேசாதீர்கள்.

கணக்கு

கார்த்தி, எந்த கணக்குகளும் அளிக்கப்படவில்லை என்று நீங்கள் கூறகிறீர்கள். தேர்தலுக்கு பிறகு சரத்குமர் தாஜ் ஹோட்டலில் வைத்து நாசரிடம் கணக்குகளை ஒப்படைத்தார். அது வீடியோவும் எடுக்கப்பட்டது.

லவ் லெட்டரா?

கார்த்தி, உங்களிடம் அளிக்கப்பட்டது என்ன காதல் கடிதங்கள் என்று நினைத்தீர்களா!!! ஏதாவது விளக்கம் கேட்டீர்களா, அப்படி கேட்டிருந்தால் நிரூபியுங்கள்.

English summary
Actress Radhika Sarathkumar has blasted actor Karthi on twitter after her husband was dismissed from the Nadigar Sangam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil