»   »  மம்மூட்டியை பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்கத் துடிக்கும் தமன்னா

மம்மூட்டியை பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்கத் துடிக்கும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டியை பார்த்தால் ஒரேயொரு கேள்வியை கண்டிப்பாக கேட்பேன் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தமன்னா பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

தமன்னா தற்போது சிம்பு படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்ரமின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விருது விழா

விருது விழா

விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள தமன்னா கேரளாவுக்கு சென்றார். விழாவில் அவரை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த மலையாள நடிகர் யார் என்று அவரிடம் கேட்டார்.

மம்மூட்டி

மம்மூட்டி

எனக்கு பிடித்த மலையாள நடிகர் மம்மூட்டி. அவர் திரையுலகில் இத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் இன்னும் இளம் ரசிகர்களை தன் பக்கம் கவரும் விதம் எனக்கு வியப்பாக உள்ளது என்றார் தமன்னா.

இளமை

இளமை

65 வயதானாலும் மம்மூட்டி இன்னும் இளமையாகவே உள்ளார். அவரை நேரில் பார்த்தால் உங்களால் மட்டும் எப்படி சார் இன்னும் இளமையாக இருக்க முடிகிறது என்று நிச்சயம் கேட்பேன் என தமன்னா கூறினார்.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

எனக்கு துல்கர் சல்மான் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் மிகவும் பிடிக்கும். விரைவில் மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார் தமன்னா.

English summary
Tamanna said that her favourite Malayalam actor is Mammooty and she wants to ask him a question when she meets him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil