»   »  சினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக்கு?!

சினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக்கு?!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னாச்சு இந்த லட்சுமி மேனனுக்கு... கோக்கு மாக்காவே பதில் சொல்லிக்கிட்டிருக்காரே என கோலிவுட் முணுமுணுக்கும் அளவுக்கு பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் சுந்தர பாண்டியன் மூலம் அறிமுகமாகி, அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் மட்டுமே நடித்துள்ளவர் லட்சுமி மேனன். இவர் தமிழில் நடித்துள்ள ஏழு படங்களுமே வணிக ரீதியில் நல்ல வெற்றி பெற்றதால், தயாரிப்பாளர்களுக்கு 'லட்சுமி தேவி'யாகத் திகழ்ந்த இவர் இப்போது நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லையாம்.


போரடிக்குது சினிமா

போரடிக்குது சினிமா

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "சினிமா போரடிக்க ஆரம்பித்துவிட்டது. சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன்.


இந்த வேடங்கள் பிடிக்கவில்லை

இந்த வேடங்கள் பிடிக்கவில்லை

நிறைய படங்களில் கிராமத்து பெண் போன்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் மாதிரியுமான கேரக்டர்களிலேயே நடித்து இருக்கிறேன். அதேபோன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு வாய்ப்புகளும் வருகின்றன. இது எனக்கு பிடிக்கவில்லை.


முழுக்கு

முழுக்கு

எனவே தான் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறேன். அதற்காக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். வேடம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.


படிப்புதான்

படிப்புதான்

இனி மேல் படிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன். இப்போது பிளஸ்-2 படிக்கிறேன். தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதே இப்போதைய நோக்கம்.


பேஷன் டிசைனர்

பேஷன் டிசைனர்

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு பேஷன் டிசைனர் ஆவேன். நல்ல வேடங்கள் கிடைத்தால், விரும்பும்போது நடிப்பேன்," என்றார்.


கார்த்தியுடன் அவர் நடித்துள்ள ‘கொம்பன்' விரைவில் திரைக்கு வருகிறது. கவுதம் கார்த்திக்குடன் அவர் நடிக்கும் ‘சிப்பாய்' படப்பிடிப்பில் உள்ளது.
English summary
Lakshmi Menon expressed her wish to quit cinema due to repeated roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil