»   »  கவுதமி கொடுக்கும் டிரஸ் பிடிக்காமல் குறை சொல்லும் ஸ்ருதி..!

கவுதமி கொடுக்கும் டிரஸ் பிடிக்காமல் குறை சொல்லும் ஸ்ருதி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடைகள் வடிவமைப்பது விஷயத்தில் ஸ்ருதி ஹாஸனுக்கும், கவுதமிக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாம்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார். அப்பாவும், மகளும் முதல் முறையாக சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது.

சபாஷ் நாயுடு படத்தின் ஆடை வடிவமைப்பு விஷயத்தை கவுதமி கவனித்து வருகிறார்.

ஸ்ருதி

ஸ்ருதி

சபாஷ் நாயுடு படத்தில் கமல் ஹாஸன் மட்டும் அல்ல ஸ்ருதிக்குமான ஆடைகளை கவுதமி தான் வடிவமைத்து வருகிறார். கவுதமியின் தேர்வுகள் ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

கோபம்

கோபம்

அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது கவுதமி அளித்த ஆடைகளை அணிய மறுத்தாராம் ஸ்ருதி. இது என் ஸ்டைல் இல்லை, இது நல்லாவே இல்லை, இது போன்ற ஆடைகளை நான் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்தாராம்.

கவுதமி

கவுதமி

என்ன சொன்னாலும் செய்தாலும் இந்த ஸ்ருதி இப்படி குறை சொல்லிக் கொண்டு அடம் பிடிக்கிறதே. இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என கவுதமி குழம்பிக் கொண்டிருக்கிறாராம்.

நெருக்கம்

நெருக்கம்

முன்பு எல்லாம் ஸ்ருதியும், கவுதமியும் பொத நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்து வருவார்கள், கை கோர்த்து இருப்பார்கள். கவுதமி விவகாரம் என் தந்தையின் தனிப்பட்ட விஷயம் என்று பெருந்தன்மையாக தெரிவித்திருந்தார் ஸ்ருதி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shrtui Haasan reportedly is not happy with Gautami's choice of costumes for Kamal starrer Sabash Naidu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil