»   »  ஹன்சிகா யாருடன் தீபாவளி கொண்டாடப் போகிறார்?

ஹன்சிகா யாருடன் தீபாவளி கொண்டாடப் போகிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹன்சிகா தீபாவளிக்கு என்ன செய்ய உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட ரசிகர்கள் மட்டும் அல்ல பிரபலங்களும் தயாராகிவிட்டனர். ஹன்சிகா நடித்து முடித்துள்ள போகன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

What is Hansika's Diwali plan?

இந்நிலையில் ஹன்சிகா தனது தீபாவளி திட்டம் குறித்து கூறுகையில்,

தீபாவளி நேரத்தில் நான் வழக்கமாக இரண்டு நாட்கள் விடுப்பு எடுப்பேன். இந்த ஆண்டும் அப்படி தான். நான் தீபாவளி அன்று மும்பையில் இருப்பேன். நான் ஆதரிக்கும் 31 குழந்தைகளுடன் பண்டிகையை கொண்டாட உள்ளேன்.

சுற்றுச்சூழலை மனதில் வைத்து பட்டாசு வெடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். மேலும் நாங்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் அவற்றை பயமுறுத்த விரும்பவில்லை.

புத்தாடை அணிந்து விளக்குகள் ஏற்றி வைத்து பூக்கோலம் போடுவோம். குழந்தைகளுக்கு சிறப்பு விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள் என்றார்.

English summary
Bubbly actress Hansika has revealed her Diwali plans. She is going to celebrate Diwali with her 31 adopted kids in Mumbai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil