For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னது...கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா?...யாரு மாப்பிள்ளை?

  |

  சென்னை : இந்திய அளவில் பாப்புலரான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

  பைலட்ஸ் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார், மறறும் தமிழ் நடிகை மேனகாவின் மகள் ஆவார். 2000 ம் ஆண்டுகளில் மலையாளத்தில் பிரபல குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.

  பிறகு படிப்பில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவிற்கு பிரேக் விட்டார். ஃபேஷன் டிசைனிங் முடித்த கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், 2015 ல் ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.

  சோதனையான காலகட்டம்.. தொடர்ந்து படங்கள் பிளாப்.. விரக்தியில் கீர்த்தி சுரேஷ் !சோதனையான காலகட்டம்.. தொடர்ந்து படங்கள் பிளாப்.. விரக்தியில் கீர்த்தி சுரேஷ் !

  வரிசையாக ஹிட்

  வரிசையாக ஹிட்

  ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா என தமிழில் இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆக ஆரம்பித்தன. தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடிகை சாவித்ரியின் பயோபிக்கில் சாவித்ரியின் ரோலில் நடித்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

  சென்ட்மென்ட்னா கீர்த்தி தான்

  சென்ட்மென்ட்னா கீர்த்தி தான்

  இதற்கு பிறகு பல படங்களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். சென்டிமென்ட் ரோல்களும், அழுத்தமான ரோல்களும் கிடைத்தன. பல டாப் ஹீரோ படங்களில் நடித்து, பேசப்படும் நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷிற்கு சமீப காலமாக நேரம் சரியில்லையோ என்னவோ தெரியவில்லை. வரிசையாக இவர் நடிக்கும் படங்கள் ஃபிளாப் ஆகி வருகின்றன.

  கைவசம் வெறும் 3 படங்கள்

  கைவசம் வெறும் 3 படங்கள்

  தற்போது தமிழில் மாமன்னன், தெலுங்கில் தசரா, போலா சங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனால் அடுத்து எப்போ ஹிட் கொடுப்பீங்க என ரசிகர்களே ஏக்கமாக கேட்க துவங்கி விட்டனர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமீப காலமாக இன்ஸ்டாகிராமிலும் கிளாமர் உடைகளில் விதவிதமாக அழகாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.

  தொடரும் கல்யாண சர்ச்சைகள்

  தொடரும் கல்யாண சர்ச்சைகள்

  இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத்தை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என வதந்தி பரவியது. பிறகு சிறிது நாட்கள் கழித்து தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அதனால் தான் படங்களில் அதிகம் நடிப்பதை குறைத்து வருவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அந்த தகவல்கள் எதுவும் உண்மையில்லை. அவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருவதாக கீர்த்தி சுரேஷின் பெற்றோர் விளக்கம் அளித்ததால் இந்த பிரச்சனை ஓய்ந்தது.

   கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா

  கீர்த்தி சுரேஷிற்கு கல்யாணமா

  இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ், #WeddingDressUp என்ற ஹேஷ்டேக்குடன் போட்டோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இதே போல் வெட்டிங் உடையில் கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்த போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகின. இந்த போட்டோக்களால் ரசிகர்கள் பலர் கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினாலும், இது என்ன புது மேட்டரா இருக்கு...எதற்காக வெட்டிங் டிரெசில் இப்படி விதவிதமாக போட்டோஷுட் நடத்தி வருகிறார். கீர்த்தி சுரேஷ் கல்யாணம் செய்து கொள்ள போகிறாரா.

  எதுக்கு இந்த போட்டோ

  எதுக்கு இந்த போட்டோ

  கல்யாணத்திற்கு தயாராவதால் தான் இதே போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். யாரு மாப்பிள்ளை என பல விதமாக நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அதுவும் கிறிஸ்தவ முறையிலான திருமண உடையில் போஸ் கொடுத்துள்ளாரே, என்ன மேட்டர் என்றே புரியவில்லையே என புதிய தீயை கொளுத்தி போட்டுள்ளனர்.

  English summary
  Keerthy Suresh shared her latest photoshoot photo with #WeddingDressUp hastag. Fans asked that would Keerthy to tie a knot. Is she was get ready for her marriage. For this reason he reduced her working of films. Keerthy latest photo goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X