»   »  “பர்த்டே பேபி” ஹன்சிகாவை ஏன் எல்லோருக்கும் இவ்ளோ பிடிச்சுருக்கு?

“பர்த்டே பேபி” ஹன்சிகாவை ஏன் எல்லோருக்கும் இவ்ளோ பிடிச்சுருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டின் பப்ளிமாஸ் நடிகையான ஹன்சிகாவிற்கு ஒருவழியாக 23 முடிந்து 24 வயது ஆரம்பித்து விட்டது. ஆனாலும், இந்த தேவதைப் பெண் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த க்யூட்டி "பை"யாகத்தான் இருந்து வருகின்றார்.

கடந்த 4 வருடங்களாக தமிழ் சினிமா உலகில் கோலோச்சி வருகின்ற இந்தப் பெண் குறும்பு மிளிரும் நடிப்பால் அனைத்து ரசிகர்கள் இதயத்திலும் தவிர்க்க முடியாதவராகிவிட்டார்.

"குட்டி குஷ்பு" என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா எதனால் இவ்வளவு எளிதாக தமிழ் ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டார் என்பதற்கும் நிறைய சுவாரசியமான காரணங்கள் உள்ளன.

அழகான முகம்:

அழகான முகம்:

ஹன்சிகாவின் முக்கியமான பிளஸ் பாயிண்ட் அவருடைய அழகு கொஞ்சும் குண்டு முகம்தான். மும்பையைச் சேர்ந்த ஹன்சி, பஞ்சாபி அம்மா, அப்பாவின் கலவை. அதனால்தான் அந்த நெய்யின் பளபளப்பு அவரது முகத்தில் கொஞ்சுகின்றது.

அசத்தலான நடிப்பு:

அசத்தலான நடிப்பு:

முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக இந்தி சீரியலில் அறிமுகமானவர் ஹன்சிகா. குழந்தைகளுக்கு அப்போது விருப்பமாக இருந்த "ஷக்கலக்க பூம் பூம்" சீரியலில் குட்டி பாப் கட் தலையுடன் நடித்து அசத்தியிருப்பார் ஹன்சிகா.

நீங்காத இடம்

நீங்காத இடம்

அதன்பிறகு வளர்ந்து இளைஞியான ஹன்சி, வெவ்வேறு விதமான கேரக்டர்களில் அப்படியே ஒன்றிப் போய் நடிப்பதால் அவர் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

செல்லம் கொஞ்சும் சிரிப்பு:

செல்லம் கொஞ்சும் சிரிப்பு:

மனதிற்கு இதமான குழந்தை சிரிப்பு கொண்டவர் ஹன்சிகா.அவரது புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்களுக்கு மனதிற்குள் உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்கின்றதாம்.

சிறந்த உடையமைப்பு

சிறந்த உடையமைப்பு

தமிழ் சினிமா உலகில் சிறந்த உடையலங்காரத்திற்காக போற்றப்படுபவர் ஹன்சிகா. அவருடைய எல்லா உடைகளுமே அவருக்கு அழகாக பொருந்திப் போகின்றது.

தனி முத்திரை

தனி முத்திரை

அதுமட்டுமல்ல தன்னுடைய கடின உழைப்பால் எல்லா படங்களிலும் தனி முத்திரையைப் பதித்துள்ளார் ஹன்சிகா. அந்த அழகான பர்த்டே பேபிக்கு இன்னும் பலபல பேர், புகழ் குவிய வாழ்த்துக்கள்!

English summary
As Hansika turns 24 today, her charm keeps spreading all over South! The belle, who has been a part of Tamil fraternity for four years, has raised expectations for her films from her fans down South.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil