அதுக்கு வேற ஆளப் பாருங்க: இயக்குநரை அதிர வைத்த தனுஷ் ஹீரோயின்
Recommended Video

சென்னை: நடிகை குத்து ரம்யா சக நடிகரிடம் அறை வாங்க மறுத்த சம்பவம் நடந்திருக்கிறது.
குத்து படம் மூலம் கோலிவுட் வந்த நடிகை ரம்யா சூர்யா, தனுஷ், அர்ஜுன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பொல்லாதவன் படம் ரம்யாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

ஆண்கள்
பெண்களை பாவப்பட்டவர்கள் போன்று காட்டும் காட்சிகள் இருந்தால் நான் அதில் நடிப்பது இல்லை. அத்தகைய காட்சிகளை மாற்றுமாறு இயக்குநரிடம் கூறிவிடுவேன். பெண்களை குறைத்துக் காட்டும் காட்சிகளில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று ரம்யா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அறை
ஒரு படத்தில் நடிகர் ஒருவர் என்னை கன்னத்தில் அறையும் காட்சி இருந்தது. அதை கேட்டவுடன் அறை எல்லாம் வாங்க முடியாது. காட்சியை உடனே மாற்றுங்கள் என்றேன். இது போன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என்று நான் இயக்குநரிடம் கறாராக தெரிவித்தேன் என்றார் ரம்யா.

விமர்சனம்
ஒரு நடிகையாக, பெண்ணாக பலதரப்பட்ட விமர்சனங்களை பார்த்துவிட்டேன். அது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்கிறேன். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன் என்று ரம்யா கூறினார்.
விளாசல்
ரம்யா அரசியல் விவகாரம் தொடர்பாக வெளியிடும் கருத்துகளால் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். இருப்பினும் அதை எல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை. அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியை பற்றி துணிச்சலாக விமர்சிக்கிறார். சவ்கிதார் விஷயத்திலும் சும்மாவிட வில்லை.


Click it and Unblock the Notifications











