»   »  பட தயாரிப்பாளரை பத்திரிகையாளர்கள் முன்பு அழ வைத்த டாப்ஸி

பட தயாரிப்பாளரை பத்திரிகையாளர்கள் முன்பு அழ வைத்த டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிங்க் பட செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகை டாப்ஸி செய்த ஒரு செயலால் தயாரிப்பாளர் ஷூஜித் சர்கார் அழுதுவிட்டார்.

அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள பிங்க் இந்தி படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 16ம் தேதி வெளியான படம் இதுவரை ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.

பிங்க்

பிங்க்

பிங்க் படம் டாப்ஸி உள்ளிட்ட 3 பெண்களை சுற்றியே நகரும். இந்நிலையில் படம் வெற்றி பெற்றதையடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

டாப்ஸி

டாப்ஸி

பத்திரிகையாளர் சந்திப்பின்போது டாப்ஸி படத்தின் தயாரிப்பாளர் ஷூஜித் சர்காரை பார்த்து எனக்கு இந்த கதாபாத்திரத்தை அளித்ததற்கு நன்றி என்று கூறி அவரது காலைத் தொட்டு கும்பிட்டார்.

அழுகை

அழுகை

நான் சீக்கிய பெண். எங்கள் சமூகத்தில் யார் காலையும் தொட்டுக் கும்பிட மாட்டோம். அதனால் காலைத் தொட்டு கும்பிட எனக்கு தெரியாது என்று டாப்ஸி கூறி ஷூஜித்தின் காலை தொட்டுக் கும்பிட்டார். உடனே ஷூஜித்துக்கு அழுகை வந்துவிட்டது.

வெற்றி

வெற்றி

பிங்க் பற்றி வரும் நல்ல விமர்சனங்களை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. என்னை பாராட்டி பலர் எனக்கு ட்வீட் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி வருகின்றனர் என்று டாப்ஸி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

பாராட்டு

பாராட்டு

பிங்க் படத்தில் மினால் அரோரா கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நன்றி என்றும், அதை பார்த்து தங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்றும் பலர் என்னிடம் தெரிவிக்கிறார்கள் என டாப்ஸி கூறியுள்ளார்.

Read more about: tapsee, டாப்ஸி
English summary
Actress Taapsee Pannu who is elated with the praise she is getting for "Pink" touched producer Shoojit Sircar's feet for offering her a role in the film at a press conference. Shoojit got quite emotional and teary-eyed at her gesture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil