»   »  நம்ம வரிப்பணம் எல்லாம் எங்கதான் போகுது: கோபத்தில் கொந்தளிக்கும் சோனாக்ஷி

நம்ம வரிப்பணம் எல்லாம் எங்கதான் போகுது: கோபத்தில் கொந்தளிக்கும் சோனாக்ஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாம் செலுத்தும் வரிப்பணம் எல்லாம் எங்கு போகிறது என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

மவுன குரு படம் இந்தியில் அகிரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது.

அகிராவில் சோனாக்ஷி அதிரடி நாயகியாக நடித்துள்ளார்.

வரிப்பணம்

வரிப்பணம்

மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் இருந்து பந்த்ரா வரை செல்லும்போது அங்குள்ளவற்றை பார்த்தால் நாம் பல வகையான வரிகள் செலுத்துகிறோம் அந்த பணம் எல்லாம் எங்கு தான் போகிறது என்று வியக்கத் தோன்றுகிறது என்கிறார் சோனா.

கோபமா வருது

கோபமா வருது

உலகில் பல விஷயங்கள் நடக்கின்றன. அதை எல்லாம் பார்க்கும்போது கோபம் கோபமாக வருகிறது. இது தான் நாம் பேசுவதற்கு சரியான நேரம். உரிமைக்காக நாம் கொடுக்கும் குரல் அனைவருக்கும் கேட்கட்டும் என்று பொங்குகிறார் சோனாக்ஷி.

பாடகி

பாடகி

அகிரா படத்தில் சோனாக்ஷி ஒரு பாடலை பாடியுள்ளார். படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் அவர் தான். இயக்குனர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். பாடல் பாடுவது மிகவும் பிடித்துள்ளாக சோனாக்ஷி கூறியுள்ளார்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

அகிரா படத்தில் சோனாக்ஷி வில்லன்களை அடித்து துவைத்து எடுக்கும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. அத்தகைய ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Sonakshi Sinha is wondering as to where our tax money is going.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil