»   »  அடுத்த 15 நாட்களுக்கு எந்த ரிசார்ட்டோ?: நடிகை ஸ்ரீப்ரியா

அடுத்த 15 நாட்களுக்கு எந்த ரிசார்ட்டோ?: நடிகை ஸ்ரீப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு ஹாலிடே ஸ்பாட் எது என்று நடிகை ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் பதவியை அடைந்திட துடித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைத்தார்.

அவர் சிறைக்கு சென்றுவிட்டாலும் அங்கிருந்து கொண்டே தமிழகத்தை ஆட்சி செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.

எடப்பாடி

எடப்பாடி

தமிழக சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

ஸ்ரீப்ரியா

முதல்வருக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அடுத்த 15 நாட்களுக்கு எந்த ஹாலிடே ஸ்பாட்? என்று கேட்டுள்ளார்.

நியூஸ் சேனல்கள்

தமிழக பிரச்சனை முடிந்துவிட்டதாக தேசிய செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன. பிரச்சனையே தற்போது தான் ஆரம்பிக்கிறது என்பது அவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் கூறுங்கள் மக்களே என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீப்ரியா.

சந்தேகம்

சந்தேகம்

அடுத்த 15 நாட்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் எந்த ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுவார்களோ என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ள நேரத்தில் அதை வெளிப்படையாக கேட்டுள்ளார் ஸ்ரீப்ரியா.

English summary
Actress Sripriya took to twitter to ask about the next holiday spot for the next 15 days. You know what she means right?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil