தல – தளபதி இருவரில் யார் ஹாட்? யார் ஸ்மார்ட்?...தமன்னா சொன்ன செம பதில்

சென்னை : தமிழ் சினிமா ஹீரோக்கள், தான் நடித்த படங்களை பற்றிய கேள்விகளுக்கு பேட்டி ஒன்றில் அழகாக, சிம்பிளாக ஒரே வார்த்தையில் பதிலளித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் நடிகை தமன்னா.

இந்திய அளவில் பல மொழிகளில் டாப் நடிகையாக இருக்கும் தமன்னா, தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால், கார்த்தி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்கள் தமன்னா. தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்து வரும் தமன்னா, தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறக பாரீஸ் பாரீஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் கடைசியாக 2019 ம் ஆண்டு பெட்ரமாக்ஸ், ஆக்ஷன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதே சமயம் பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவிற்கு தெலுங்கில் மார்க்கெட் உயர்ந்தது. அதிகமான பட வாய்ப்புக்களும் வர துவங்கியது. இதனால் அங்கேயே பிசியாகி விட்டார்.

தமன்னாவிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் நடித்த படங்கள், தமிழ் ஹீரோக்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா அளித்த பதில்கள் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அஜித், விஜய் பற்றியும் தமன்னா பேசி உள்ளார். இவரின் இந்த பேட்டியை வைத்தும் அஜித், விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மோதி வருகின்றனர். தமன்னா அளித்த பேட்டி விபரம்,

Who is hot, who is smart thala - thalapathy...Tamannahs smart reply attracts everyone

* தற்போதுள்ள ஹீரோ, ஹீரோயினில் உங்களுக்கு பிடித்தது யார் ?

தற்போதுள்ளவர்கள் என்றால் நடிகைகளில் நயன்தாரா. நடிகர் என்றால் அஜித்.

* தல - தளபதி...இவர்களில் யார் ஹாட், யார் ஸ்மார்ட் ?

தல- ஹாட் ; தளபதி - ஸ்மார்ட்

* உங்களுடன் நடித்தவர்களில் அதிக கம்ஃபர்டபிளான நடிகர்கள்...தமிழ் மற்றும் தெலுங்கில் யார்

தெலுங்கில் பிரபாஸ். தமிழில் தனுஷ்.

* நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்கு பிடித்த டூயட் சாங் எது

பையா படத்தில் வரும் அடடா மழைடா. அது மட்டுமில்லாமல் கண்ணே கலைமானே பாடல்களும் மிகவும் பிடிக்கும். பையா, கண்ணே கலைமானே படங்களில் வரும் பாடல்கள் அனைத்துமே சூழ்நிலை சார்ந்த பாடல்கள். அவற்றின் இசை மற்றும் பாடல்கள் அருமையாக இருக்கும் என்றார்.

தமன்னாவின் இந்த பேட்டியை வைத்து அஜித், விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, சூர்யா ரசிகர்களும் மோத துவங்கி விட்டனர். சூர்யாவை பற்றி ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அப்புறம் எப்படி இது சரியாக இருக்கும் என கேள்வி கேட்க துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X