»   »  லேகாவா பாவனாவா?

லேகாவா பாவனாவா?

Subscribe to Oneindia Tamil

சத்யஜோதி பிலிம்ஸின் ஜெயம் கொண்டான்' படத்தின் முதல் கதாநாயகி நானே என்கிறார் பாவனா.

இந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள லேகா வாஷிங்டன், 'நான்தான் முதல் நாயகி' என்று கூறிவந்தார். இதைக் கேட்டு கடுப்பான பாவனா இயக்குநருக்கே போன் போட்டு கேட்டுவிட்டாராம். பதறிப்போன இயக்குநரும் , சந்தேகமே வேண்டாம் , நீங்கதான் முதல் நாயகி என்று கூறியிருக்கிறார்.

(இந்தப் படத்தில் உனக்காக உனக்காக படத்தின் ஹீரோ வினய் தான் ஹீரோ)

இதுகுறித்து பாவனா கூறுகையில், நல்ல பெயர் வாங்கித் தரும் படங்களில் நடித்தால் போதும் என்பதற்காகவே, தேடிப்பிடித்து நல்ல கதைகளை ஒப்புக் கொள்கிறேன். இதற்காக சில தெலுங்கு பட வாய்ப்புகளைக் கூட தவிர்த்தேன். நான்தான் இந்தப் படத்தின் நாயகி . வேறு யார், எந்தப் பாத்திரத்தில் நடிக்கிறார் என்று எனக்கு அக்கறையில்லை என்றவர் தொடர்ந்து,

இந்தப் படத்தில் எனக்கு மாடர்ன் பெண் வேடம். அதற்குத் தேவையான அளவு கவர்ச்சியான உடைகளை அணிய முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் வல்கரான எந்தக் காட்சியிலும் நடிக்க மாட்டேன். அதற்கான அவசியமும் எனக்கு இல்லை...என்றார்.

அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, முதல் படத்தில் நான் எவ்வளவு சம்பளம் வாங்கினேனோ, அதைத்தான் இப்போதும் வாங்குகிறேன். அதற்கு கீழே ஒப்புக் கொள்வதில்லை என்றார் அழுத்தமாக!

Read more about: bhavana, lekha
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil