»   »  அது யாரு சிம்ரன்?: இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகை

அது யாரு சிம்ரன்?: இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்ரன் யார் என்று நடிகை சனா இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேட்டு அதிர வைத்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ரங்கூன் படத்தில் கவுதம் கார்த்திக், சனா பக்புல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்.


மும்பையை சேர்ந்த சனா மக்புல் படம் பற்றி கூறும்போது,


ராஜ்குமார்

ராஜ்குமார்

ராஜ்குமார் சார் ஆடிஷனுக்காக மும்பை வந்திருந்தார். ஆடிஷன் பட்டியலில் என் பெயர் தான் கடைசியில் இருந்தது. நான் நடித்ததை பார்த்துவிட்டு அவர் கதாபாத்திரம் பற்றி விரிவாக பேசியபோதே அவருக்கு என் நடிப்பு பிடித்துவிட்டது என்று எனக்கு தெரிந்தது.


நடாஷா

நடாஷா

ரங்கூன் படத்தில் வளர்ந்து வரும் பாடகி நடாஷாவாக நடித்துள்ளேன். குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண் நடாஷா. கவுதம் கார்த்திக் ஒரு ஸ்வீட் ஹார்ட்.


கவுதம்

கவுதம்

கவுதம் கார்த்திக்குடன் நடித்தது நல்ல அனுபவம். அவர் நடிப்பில் எனக்கு உதவி செய்தார். அவருடன் சேர்ந்து நடித்ததை நான் என்ஜாய் செய்தேன். தமிழ் வரிகளுக்கு நான் வாயசைக்க இயக்குனர் குழு உதவி செய்தது.


சிம்ரன்

சிம்ரன்

நான் சிம்ரனை நினைவூட்டுவதாக முருகதாஸ் தெரிவித்தார். இதையே தான் இயக்குனரும் என்னிடம் முன்பு தெரிவித்தார். என் நடிப்பு சிம்ரனை நினைவூட்டுவதாக ராஜ்குமார் சார் கூறினார்.


யார்?

யார்?

எனக்கு சிம்ரன் பற்றி அப்போது தெரியாது. அதனால் என்னை பாராட்டுகிறீர்களா என்று ராஜ்குமார் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் திரையுலகை 10-15 ஆண்டு காலம் ஆண்டவர் சிம்ரன் என்றார். இதை விட எனக்கு பெரிய பாராட்டு வேறு எதுவும் இருக்காது என்கிறார் சனா.


English summary
Rangoon actress Sana Makbul has asked her director Rajkumar about Simran after he complimented her acting by comparing with the senior actress.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil