»   »  நடிகை கஸ்தூரி.... ஏன் அந்த 'உண்மையான' பேட்டியை இன்னும் ஃபேஸ்புக்ல போடல?

நடிகை கஸ்தூரி.... ஏன் அந்த 'உண்மையான' பேட்டியை இன்னும் ஃபேஸ்புக்ல போடல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோவாக இருந்து அரசியல்வாதியாக ஆன ஒருவர் தான் ஹீரோயினாக நடித்தபோது தன்னை படாதபாடு படுத்தியதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

Who is that hero/politician who harassed Kasturi?

இந்நிலையில் மகள் நடனம் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்துள்ள கஸ்தூரி,
பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "நான் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில், சில படங்களில் இருந்து நான் வெளியேற்றப்பட்டுள்ளேன். காரணம், சிலர் கேட்டபடி அட்ஜெஸ்ட் செய்தாதது தான். அதுவும் இதுக்கு எல்லாம் ஒரு ஹீரோ தான் காரணம்.

அந்த ஹீரோ தற்போது அரசியல்வாதியாக உள்ளார். அவருக்கு ஈகோ பிரச்சினை என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

அந்த ஹீரோவுடன் நான் நடித்த ஒரு படம் முடியும் வரை என்னை கொடுமைப்படுத்தினார். மேலும் என்னை இரண்டு படங்களில் இருந்து வெளியேற்றினார்.

Who is that hero/politician who harassed Kasturi?

அந்த ஹீரோ என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மகள் என்னிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் முக்கியம் என்றார். என் அம்மா அவர் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை," என்றார்.

ஆனால் இந்தப் பேட்டி வெளியான சில தினங்களிலேயே நான் இப்படியெல்லாம் பேசவில்லை. ஆன்லைன் மீடியா பொறுப்பில்லாமல் வெளியிட்டுவிட்டன என்று கடுமையாகப் பேசி வீடியோ வெளியிட்டார். மேலும் தன் முழுப் பேட்டியை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப் போவதாகவும் கூறியிருந்த அவர், இன்று வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Kasturi said that a hero who is a politician now harassed her when she acted with him in a movie few years back.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil