கோடிகளில் சொத்து இருந்தும் அனுபவிக்க மனமில்லை.. கஞ்சமாக வாழும் மிருணாள் தாகூர்.. காரணம் தான் ஹைலைட்!

சென்னை: நடிகை மிருணாள் தாக்கூர், தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தனது அழகு மற்றும் நடிப்பின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவராக உள்ளார். குறிப்பாக, 'சீதாராமம்' திரைப்படம் தென்னிந்தியாவில் அவருக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அந்த படத்திற்குப் பின்னர் அவர் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா என அவர் கொஞ்சம் பிசியான நடிகையாகத்தான் வலம் வருகிறார்.

இந்நிலையில், மிருணாள் தாக்கூர் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஸ்டைலாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும் மிருணாள், தனது அன்றாட வாழ்க்கையிலும் ஆடம்பரமாகவே வாழ்வதைப் போல காட்சி அளிக்கிறார். குறிப்பாக விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

Why Actress Mrunal Thakur Lives Very Simple Life She Explains Fans get Shocked
Photo Credit:

இந்த சூழலில், மிருணாள் தாக்கூர் தனது ஆடைகள் குறித்த ஒரு வியப்பூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், எத்தனை விலை கொடுத்து ஆடைகள் வாங்கினாலும், அவை பெரும்பாலும் அலமாரியிலேயே முடங்கிக் கிடக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சமீபத்திய நேர்காணலில், தான் வாங்கியதிலேயே அதிக விலை கொண்ட ஆடை வெறும் ரூபாய் 2 ஆயிரம் மட்டுமே என்று அவர் கூறியது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கஞ்சத்தனம்: ஒரு முன்னணி நடிகையாக இருந்தும், கோடிகளில் சம்பளங்கள் வாங்கியும் இவ்வளவு குறைந்த விலையில் ஆடைகள் வாங்குவதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரைப்பட விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் மிருணாள் தாக்கூர் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருகிறார். ஆனால் அவை அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும், விலை உயர்ந்த ஆடைகளை வாங்க அவருக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது சம்பாத்தியத்தை வகைவகையான உணவு மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யவே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களும் இணையவாசிகளும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை இவ்வளவு கஞ்சத்தனமாக இருக்க கூடாது என்று விமர்சித்து வருகிறார்கள்.

Why Actress Mrunal Thakur Lives Very Simple Life She Explains Fans get Shocked
Photo Credit:
படங்கள்: மிருணாள் தாக்கூர் தெரிவித்த இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 2018 முதல் திரைப்படத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். முதலில் பாலிவுட்டிலும் பின்னர் டோலிவுட்டிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சினிமா துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தெலுங்கில், 'ஹாய் நான்னா' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியுடனும், 'ஃபேமிலி ஸ்டார்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுடனும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், பிரபாஸின் 'கல்கி 2898 AD' படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இணையும் 'AA22xA6' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, அடிவி சேஷின் 'டகோய்ட்: எ லவ் ஸ்டோரி' மற்றும் மூன்று ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X