»   »  30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி

30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது கணவர் என்றாவது மாறி தன்னை அன்பாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் 30 ஆண்டுகளாக அவர் செய்த கொடுமைகளை தாங்கிக் கொண்டதாக நடிகை ரதி அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படம் மூலம் நடிகையானவர் ரதி அக்னிஹோத்ரி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். பின்னர் பாலிவுட் பக்கம் சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர் தொழில் அதிபர் அனில் விர்வானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு அனுஜ் விர்வானி என்ற மகன் உள்ளார். அனுஜ் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

ரதி

ரதி

ரதி என்ற நடிகை ஒருவர் இருக்கிறார் என்பதை கோலிவுட் ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட நிலையில் தான் அவர் மீண்டும் அனைவரின் நினைவுக்கும் வந்தார். காரணம் அவர் தனது கணவர் அனில் விர்வானி தன்னை உடல் ரிதீயாகவும், மன ரீதியாகவும் கொடுமைபடுத்துவதாக மும்பை போலீசில் புகார் அளித்தார்.

மறுப்பு

மறுப்பு

அடடா நம்ம ரஜினி சார், கமல் சார் கூட நடித்த ரதியா இது அடையாளமே தெரியவில்லை. பாவம் கணவர் துன்புறுத்துகிறாராம் என்று ரசிகர்கள் அவருக்காக பரிதாபப்பட்டனர். ஆனால் ரதியின் கணவரோ தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்று தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகள்

30 ஆண்டுகள்

30 ஆண்டுகளாக தன்னை அனில் கொடுமைப்படுத்தியதாக ரதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு அனில் ரதியை கொடுமைப்படுத்த துவங்கினாராம். காலம் செல்லச் செல்ல அவரின் கொடுமைகளும் அதிகரித்ததாக ரதி கூறியுள்ளார்.

கொடுமை

கொடுமை

அனில் ஒரு நாள் மாறி தன்னை அன்பாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே காலம் கடத்தியதாக ரதி தெரிவித்துள்ளார். மகனுக்காகவும், திருமணத்தின் புனிதத்தை காக்கவும் அனிலின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு அவருடன் இருந்தாராம் ரதி. இனியும் தாங்க முடியாது என்று நினைத்த அவர் கணவரை பிரிந்துவிட்டார்.

அடி, உதை

அடி, உதை

அனில் ரதியை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். பிறர் பார்க்க முடியாத இடங்களாக பார்த்து அவர் அடித்துள்ளார். அப்போது தான் யாருக்கும் தடம் தெரியாது என்று கருதியுள்ளார் அனில்.

பெற்றோர்

பெற்றோர்

என் பெற்றோருக்கு அனிலை பிடிக்கவில்லை. ஆனால் காதல் மீது நம்பிக்கை கொண்ட நான் என் பெற்றோரின் விருப்பத்தையும் மீறி அனிலை திருமணம் செய்து கொண்டேன். அவர் திருந்த வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளாக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் என்கிறார் ரதி.

English summary
Actress Rati Agnihotri told that she endured domestic violence for three decades.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil