»   »  அப்போ சூர்யா படத்துல நயன் தான் ‘மாஸ்’-ஆ ?

அப்போ சூர்யா படத்துல நயன் தான் ‘மாஸ்’-ஆ ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சூர்யா - வெங்கட்பிரபு கூட்டணியில் தயாராகும் மாஸ் படத்திலிருந்து தான் விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

மதராசப்பட்டிணம் படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். விக்ரம் ஜோடியாக ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஐ படம் ஜனவரியில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சூர்யாவுடன் ஒரு படம், தனுஷுடன் ஒரு படம், உதயநிதியுடன் ஒரு படம் என கை நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது எமிக்கு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திற்கான போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. இப்படத்தில் ஏற்கனவே இன்னொரு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தார்.

மாஸ் பட கவர்ச்சி ஸ்டில்கள் பரபரப்பாக வெளியான நிலையில், திடீரென எமி அப்படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் ‘சகுனி' படத்தில் நடித்த ப்ரணிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘மாஸ்' படத்தில் இருந்து தான் விலகியதற்கு விளக்கம் அளித்துள்ளார் எமி ஜாக்சன். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

எல்லோரும் கேட்கும் கேள்வி...

எல்லோரும் கேட்கும் கேள்வி...

ஏன் சூர்யா படத்தில் இருந்து திடீரென்று விலகிவிட்டீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அதனால், எல்லோருக்கும் நான் நேரடியாகவே ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

மகிழ்ச்சியாக இருந்தது...

மகிழ்ச்சியாக இருந்தது...

வெங்கட்பிரபு-சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. துரதிருஷ்டவமாக அது அமையவில்லை.

வெயிட்டான கேரக்டர்கள்...

வெயிட்டான கேரக்டர்கள்...

ஷங்கர் படத்திற்கு பிறகு வெயிட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

நம்பிக்கை...

நம்பிக்கை...

தற்போது அந்த வாய்ப்பு அமையாவிட்டாலும், எதிர்காலத்தில் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நயன் தான் மாஸ்...

நயன் தான் மாஸ்...

மாஸ் படத்தில் இருந்து எமி வெளியேறியதன் மூலம் அப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது இலை மறை காயாக தெரிய வந்துள்ளது.

English summary
Beautiful actress Amy Jackson who is awaiting the release of Shankar’s ‘I’ opened up about walking out of Suriya’s Masss. Amy Jackson’s role was replaced by Pranitha.
Please Wait while comments are loading...