»   »  குண்டுப் பொண்ணா நடிக்க சம்மதிச்சது ஏன் தெரியுமா? - அனுஷ்கா சொல்வதைக் கேளுங்க!!

குண்டுப் பொண்ணா நடிக்க சம்மதிச்சது ஏன் தெரியுமா? - அனுஷ்கா சொல்வதைக் கேளுங்க!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவா நடிகர்கள்தான் கேரக்டர்களுக்கேற்ப உடம்பை ஏத்துவாங்க, இறக்குவாங்க.. நடிகைகள் அப்படி மெனக்கெடமாட்டார்கள் என்பார்கள் சினிமாவில்.

ஆனால் அந்த வழக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உண்மையிலேயே தன் 'ஃபிட்' உடம்பை குண்டாக்கிக் காட்டியிருக்கிறார்.

Why Anushka accepts Inji Iduppazhagi?

எந்த நடிகையும் அத்தனை சுலபத்தில் ஒப்புக் கொள்ளாத இந்த வேடத்தை ஏற்றது ஏன்? இதோ அனுஷ்கா சொல்லும் பதில்...

"ஒவ்வொரு பெண்ணும் குண்டாக இருக்கிறோமே அல்லது ஒல்லியாக இருக்கிறோமே என்று கவலைப்பட வேண்டாம். அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல. அதனால் அழகாக இல்லையே என்று எந்த பெண்ணும் கவலைப்பட தேவையில்லை.

Why Anushka accepts Inji Iduppazhagi?

சின்ன வயதில் என்னை அழகாக இருப்பதாக பலர் சொல்லியிருக்கிறார்கள். அதைக்கேட்டுக் கேட்டுப் பழகி விட்டது. எனவேதான் இந்தப் படத்தில் குண்டுப் பெண்ணாக வரவேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், உடனே நடிக்க சம்மதித்தேன். கதாபாத்திரத்துக்காக நிறைய சாப்பிட்டு உடலை குண்டாக்கிக் கொண்டேன்," என்றார்.

  English summary
  Why Anushka accepts to play a overweight girl in Inji Iduppazhagi? Here is the answer!
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil