»   »  அனுஷ்கா ஏன் டப்பிங் பேசுவதில்லை... அவரே சொன்ன உண்மையான காரணம்!

அனுஷ்கா ஏன் டப்பிங் பேசுவதில்லை... அவரே சொன்ன உண்மையான காரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனுஷ்கா ஏன் டப்பிங் பேசுவதில்லை

சென்னை : நடிகை அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த வகையில், தமிழ், தெலுங்கில் இதுவரை அனுஷ்கா 47 படங்களில் நடித்து விட்டார்.

தமிழை விட தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார் அனுஷ்கா. ஆனால் இதுவரை அவர் தான் நடித்த எந்தவொரு படத்திற்கும் தனக்குத்தானே டப்பிங் பேசியதில்லை.

இதுகுறித்து டோலிவுட்டில் சிலர் அனுஷ்காவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தன் படங்களுக்கு தான் டப்பிங் பேசாததற்கு என்ன காரணம் எனக் கூறியுள்ளார் அனுஷ்கா.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கில் இதுவரை அனுஷ்கா 47 படங்களில் நடித்து விட்டார். தமிழை விட தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார் அனுஷ்கா. ஆனால் இதுவரை அவர் தான் நடித்த எந்தவொரு படத்திற்கும் தனக்குத்தானே டப்பிங் பேசியதில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுகுறித்து சிலர் அனுஷ்காவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அனுஷ்கா பதிலளிக்கையில், "நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்து வருகிறது. ஆனால், எனது தோற்றத்தை விட எனது குரல் சின்னப்பெண் பேசுவது போன்று இருக்கும்.

கிண்டல் செய்வார்கள்

கிண்டல் செய்வார்கள்

எனது வீட்டில் இருப்பவர்கள்கூட குழந்தை பேசுவது போல் இருப்பதாக கிண்டல் செய்வார்கள். அதோடு, நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அந்த வேடங்களுக்கு குழந்தைத்தனமாக பேசினால் காமெடியாக இருக்கும். கேரக்டரும் ஒர்க்அவுட் ஆகாது.

டைரக்டரிடம் கேட்பதில்லை

டைரக்டரிடம் கேட்பதில்லை

அதனால் தான் டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தபோதும், டப்பிங் பேச வேண்டும் என்று டைரக்டர்களிடம் நான் கேட்டதில்லை" எனக் கூறியிருக்கிறார் அனுஷ்கா. அனுஷ்கா டப்பிங் பேசாததற்கான நியாயத்தை உணர்ந்தவர்கள் அதுபற்றி அவரிடம் கேட்பது இல்லையாம்.

உடல் எடை

உடல் எடை

'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடித்த அனுஷ்கா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை கணிசமாக அதிகப்படுத்தினார். ஆனால், அதையடுத்து 'பாகுபலி 2' படத்திற்காக அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் குண்டான அனுஷ்காவை வைத்தே படப்பிடிப்பை தொடங்கினர்.

உறுதியாக இருந்த அனுஷ்கா

உறுதியாக இருந்த அனுஷ்கா

இந்தநிலையில், உடல் எடையைக் குறைத்த பிறகுதான் புதிய படங்களில் கையெழுத்திடுவேன் என்பதில் உறுதியாக இருந்துவந்த அனுஷ்கா ஸ்லிம்மாக மாறினார். அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' திரைப்படம் செம வசூல் கொடுத்துள்ளதால் ஹேப்பியாக இருக்கிறார்.

English summary
Actress Anushka shetty speaks fluently in Telugu language than Tamil. But she has never spoken dubbing for any film she has ever played. Anushka said the reason for Why she didn't dubbing for herself.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil