»   »  கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தாலும் பாலிவுட்டில் குப்பற அடித்து விழும் தமிழ் நடிகைகள்

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தாலும் பாலிவுட்டில் குப்பற அடித்து விழும் தமிழ் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட்டுக்கு சென்ற த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் அங்கு ஜொலிக்க முடியாமல் போன வேகத்தில் கோலிவுட், டோலிவுட்டுக்கே திரும்பி வந்துவிட்டனர்.

கோலிவுட் நாயகிகள் பலருக்கு பாலிவுட் பக்கம் சென்று பெயரும், புகழும் அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் பாலிவுட் செல்லும் தமிழ் நடிகைகள் எல்லோரும் அங்கு வெற்றி பெறுவது இல்லை.

இதையடுத்து போன வேகத்தில் கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்துவிடுகிறார்கள்.

அசின்

அசின்

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த அசினை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட் பக்கம் அழைத்துச் சென்றார். அதோடு அங்கு செட்டிலானவர் இந்த பக்கமே வர விரும்பவில்லை. அங்கும் ஜொலிக்க முடியாமல் போராடியவர் தொழில் அதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

த்ரிஷா

த்ரிஷா

டோலிவுட்டும், கோலிவுட்டும் சிவப்புக் கம்பளம் விரித்த நிலையில் த்ரிஷாவுக்கும் பாலிவுட் ஆசை வந்து அங்கு சென்றார். அவர் நடித்த படம் புஸ்ஸாகி அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து கோலிவுட்டுக்கே திரும்பி வந்துவிட்டார்.

காஜல்

காஜல்

காஜல் அகர்வாலும் பாலிவுட்டுக்கு சென்றார். அவர் நடித்த படம் ஓடியது. ஆனால் அவருக்கு யாரும் வாய்ப்பு தருவதாக இல்லை. இனியும் இங்கிருந்தால் வேலை நடக்காது என்று தமிழ், தெலுங்கு படங்களுக்கே திரும்பினார்.

தமன்னா

தமன்னா

மில்க் பியூட்டி தமன்னா பாலிவுட் படத்தில் நடித்தார். அவரை நடிகர் ரித்திக் ரோஷன் கூட புகழ்ந்தார். எல்லாம் சரி, வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை. விளைவு தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

கோலிவுட், டோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் ஸ்ரேயா பாலிவுட் பக்கமும் சென்றார். அங்கும் பாவம் அவருக்கு மவுசு இல்லை. அதனால் வரும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலிவுட் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார் ஸ்ரேயா.

இலியானா

இலியானா

டோலிவுட்டில் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தார்கள் இலியானாவுக்கு. அம்மணியோ நான் பாலிவுட்டுக்கு போகிறேன் என்று ஹைதராபாத்தை காலி செய்தார். அவர் நடிப்பை பாராட்டிய பாலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் திருமணமாகி செட்டிலாகிவிடலாமா என்று பலத்த யோசனையில் உள்ளார்.

டாப்ஸி

டாப்ஸி

நம்ம டாப்ஸியும் பாலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். ஆனால் அவர் நேரம் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஓடவில்லை. இதனால் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

English summary
Kollywood actresses are finding it very difficult to shine in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil