»   »  ஏன் எப்ப பார்த்தாலும் ஷூட்டிங்கிற்கு லேட்டா வருகிறீர்கள்?: சிம்புவை கேட்ட மஞ்சிமா

ஏன் எப்ப பார்த்தாலும் ஷூட்டிங்கிற்கு லேட்டா வருகிறீர்கள்?: சிம்புவை கேட்ட மஞ்சிமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பின்போது சிம்புவை பார்த்து ஏன் எப்ப பார்ததாலும் லேட்டாக வருகிறீர்கள் என மஞ்சிமா மோகன் கேட்டுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளவர் கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன்.


முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகிவிட்டார் மஞ்சிமா.


சிம்பு

சிம்பு

அச்சம் என்பது மடமையடா படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போனது. இதற்கு சிம்பு சரிவர படப்பிடிப்புக்கு வராததும் காரணம் என்று செய்திகள் வெளியாகின.


மஞ்சிமா

மஞ்சிமா

நீங்கள் ஏன் படப்பிடிப்புக்கு லேட்டாகவே வருகிறீர்கள் என்று மஞ்சிமா ஒரு நாள் சிம்புவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னால் ரோபோ மாதிரி இருக்க முடியாது. படப்பிடிப்புக்கு ரெடி என்று தோன்றிய பிறேகே வருவேன் என கூறியுள்ளார்.
வேகம்

வேகம்

சிம்புவின் பதிலை கேட்ட மஞ்சிமா அதில் இருந்து அவர் லேட்டாக வந்தாலும் கேள்வி கேட்கவில்லை. சிம்பு லேட்டாக வந்தாலும் அவர் வேலையை சரியாக செய்து முடித்துவிடுவார் என்கிறார் மஞ்சிமா.


குண்டு

குண்டு

பிரபல இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றேன். மிகவும் நம்பிக்கையுடன் சென்ற என்னை பார்த்த அவர் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என் படத்தில் நடிக்க முடியாது என்று கூறினார் என மஞ்சிமா தெரிவித்தார்.
English summary
New comer Manjima Mohan once asked Simbu as to why he comes to the shooting late.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil