»   »  நான் ஏன் கரச்சான் மண்டை ஆனேன்?: வீடியோ வெளியிட்ட ஓவியா

நான் ஏன் கரச்சான் மண்டை ஆனேன்?: வீடியோ வெளியிட்ட ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஹேர்ஸ்டைலை மாற்றியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகை ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஓவியா தனது ஹேர்ஸ்டைலை மாற்றினார்.

ஓவியா ஆரவை காதலித்து அது நிறைவேறாத வருத்தத்தில் ஹேர்ஸ்டைலை மாற்றியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஓவியா வீடியோ மூலம் கூறியிருப்பதாவது,

ஸ்டைல்

ஸ்டைல்

இந்த ஹேர்கட் என்னுடைய புதிய ஸ்டைல். நான் ஒரு காரணத்திற்காக தான் முடியை வெட்டினேன். ஒரு விக்கு கம்பெனி என்னை அணுகி புற்றுநோயாளிகளுக்கு விக்கு செய்ய தலைமுடியை வெட்டிக் கொடுக்குமாறு கேட்டார்கள்.

முடி

முடி

ஹேர் போனால் ரொம்ப கஷ்டம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஹேர் போனால் நம் அழகே போய்விட்டது என்று மனஅழுத்தம் ஏற்படும். நான் பார்த்திருக்கிறேன்.

அம்மா

அம்மா

என் அம்மாவும் புற்றுநோயாளி தான். முடி இல்லை என்றால் என்றால் புற்றுநோயாளிகள் எப்படி உணர்வார்கள் என்று எனக்கு தெரியும். சரி ஒரு ஹேர்கட் அடிக்கலாமே என்று நினைத்து செய்தேன்.

ரோல் மாடல்

நிறைய பேர் என்னை ரோல் மாடலாக நினைக்கிறார்களாம். தயவு செய்து அப்படி செய்யாதீர்கள். நான் பெர்ஃபெக்ட் கிடையாது. தவறுகள் செய்வேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Oviya has released a video in which she has explained the reason behind her new hair cut.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil