»   »  டோலிவுட்டை சுத்தல்ல விட்டுட்டு, கோலிவுட்டை இவர்கள் சுத்துவது ஏன்?

டோலிவுட்டை சுத்தல்ல விட்டுட்டு, கோலிவுட்டை இவர்கள் சுத்துவது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டோலிவுட்டில் மார்க்கெட் இருந்தும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கோலிவுட்டில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணங்கள் உள்ளது.

டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் சமந்தா. சமந்தா நடித்தால் அந்த படம் ஹிட் தான் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தது. காஜல் அகர்வால் தெலுங்கு ஹீரோக்களுக்கு பிடித்த ஹீரோயின் ஆவார். காரணம் அம்மணி படப்பிடிப்பில் பொறுமையாக இருப்பது.

தெலுங்கு ரசிகர்கள் ஸ்ருதி காய்ச்சல் பிடித்து திரிவதால் டோலிவுட்டில் உலக நாயகன் மகளுக்கு செம மவுசு உள்ளது.

தமிழ் படங்கள்

தமிழ் படங்கள்

சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதி என தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ள ஹீரோயின்கள் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தெலுங்கை விட தமிழ் படங்களில் நடிக்கவே முன்னுரிமை அளிக்கிறார்கள்.

சமந்தா

சமந்தா

சமந்தாவுக்கு கத்தி படத்தை அடுத்து தான் தமிழில் மார்க்கெட் பிக்கப்பானது. அவர் விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுடன் 24 படத்தில் நடிக்கிறார். தெலுங்கு படங்களில் நடிக்க அழைத்தால் டேட்ஸ் இல்லை என்கிறாராம்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தனுஷ் ஜோடியாக மாரி படத்தில் நடிக்கிறார். இது தவிர விஷாலின் பாயும் புலி, விகர்ம் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அம்மணியும் டோலிவிட்டில் ரொம்ப பிசி ஆகும்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதிக்கு தெலுங்கு படங்களில் நடிக்க நேரமே இல்லை. தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அஜீத் படத்தில் நடிக்க உள்ளார். இது தவிர அவர் இந்தி படங்களில் ஏக பிசி.

தமிழ் ஏன்?

தமிழ் ஏன்?

சமந்தா, காஜல், ஸ்ருதி ஏன் தெலுங்கை விட தமிழ் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்றால் காரணம் உள்ளது. தமிழ் திரையுலகில் கேட்ட சம்பளம் கிடைக்கும், குறைந்த நாட்கள் கால்ஷீட், ராஜ மரியாதை கிடைக்கும்.

தெலுங்கு

தெலுங்கு

ஏராளமான தமிழ் படங்கள் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்படுவதால் அதையும் மனதில் வைத்து அம்மணிகள் சம்பளம் வாங்குகிறார்கள். தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய திட்டமிடும் தமிழ் தயாரிப்பாளர்கள் டோலிவுட்டில் மார்க்கெட் இருக்கும் நடிகைகளையே தேடிச் செல்கிறார்கள்.

English summary
Samantha, Kajal Agarwal and Shruti Haasan prefer Kollywood to Tollywood for some reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil