»   »  சிம்பு சொன்ன 'அந்த ஒத்த' வார்த்தையால் காதல் முறிந்தது: ஹன்சிகா

சிம்பு சொன்ன 'அந்த ஒத்த' வார்த்தையால் காதல் முறிந்தது: ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்புவை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

வாலு படத்தில் நடிக்கும்போது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். படம் முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. காதல் முறிந்த பிறகு சில காட்சிகளில் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

இந்நிலையில் ஹன்சிகா சிம்புவை பிரிந்தது பற்றி பேசியுள்ளார்.

சிம்பு

சிம்பு

நானும், சிம்புவும் சரியான ஜோடி, அம்சமான ஜோடி என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது என்கிறார் ஹன்சிகா.

பிரிவு

பிரிவு

சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பிரிந்துவிட்டேன் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். ஆனால் அது என்ன வார்த்தை என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

சுசிலீக்ஸ்

சுசிலீக்ஸ்

பாடகி சுசித்ரா ஹன்சிகா யாருடனோ நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். இது குறித்து ஹன்சிகா கூறுகையில், இந்த சர்ச்சைக்கு பின்னால் இருக்கும் உண்மையான நபரை தெரியாமல் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

வில்லன்

வில்லன்

ஹன்சிகா தற்போது மோகன்லால் நடித்து வரும் வில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார். ஹன்சிகா நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hansika said that she and Simbu parted ways after she was deeply hurt by one word uttered by the actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil