»   »  தொலஞ்சி போங்கடா: 'இந்த' நேரத்தில் ஸ்ரீப்ரியா ஏன் இப்படி ட்வீட்டினார்?

தொலஞ்சி போங்கடா: 'இந்த' நேரத்தில் ஸ்ரீப்ரியா ஏன் இப்படி ட்வீட்டினார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திறமைசாலிகள் மற்றும் அனுபவசாலிகள் ஏன் கவுரவிக்கப்படுவது இல்லை என்று நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எத்தனையோ பரதநாட்டிய மேதைகள் இருக்கும்போது ஐஸ்வர்யா தனுஷுக்கு எப்படி ஐ.நா. சபையில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கவுரவம்

திறமைசாலிகள் மற்றும் அனுபவசாலிகள் ஏன் கவுரவிக்கப்படுவது இல்லை? அதிகாரம் படைத்தவர்களை தெரிந்திருக்க வேண்டும். அறிவுரையாளர்களுக்கு அவர்கள் செய்வது தெரியாதா? தொலஞ்சி போங்கடா என ட்வீட்டியுள்ளார் ஸ்ரீப்ரியா.

ரஜினி

ஸ்ரீப்ரியாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர், நீங்கள் ரஜினியிடம் சொல்லலாமே என்று கமெண்ட் போட்டார்.

அரசு

அவர் ஏன், அரசு அல்லவா செய்ய வேண்டும் என ரஜினியிடம் பேசச் சொன்னவருக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ரீப்ரியா.

பரதம்

@sripriya நிஜமாகவே வேதனையாக உள்ளது...உலகத்திற்கு முன்பு பரதநாட்டியம் மோசமாக காண்பிக்கப்பட்டுள்ளது என ரசிகை ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Actress Sripriya tweeted that, 'Y talented&experienced not honoured?U have2 lobby or hav Pinfluence.dont advisors know history of d subject they deal with? tholanjipongada'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil