»   »  சாப்பாடு சரியில்லை, ஹோட்டல் சரியில்லை என்று மல்லுக்கட்டிய வரலட்சுமி?

சாப்பாடு சரியில்லை, ஹோட்டல் சரியில்லை என்று மல்லுக்கட்டிய வரலட்சுமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பா படத்தின் மலையாள ரீமேக்கில் இருந்து வரலட்சுமி சரத்குமார் ஏன் விலகினார் என்று இயக்குனர் சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளதாக மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படம் மலையாளத்தில் ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படம் மூலம் சமுத்திரக்கனி மலையாள திரையுலகில் இயக்குனராகியுள்ளார்.

சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்து வருகிறார்.

வரலட்சுமி

வரலட்சுமி

ஜெயராம் ஜோடியாக வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர். ஆணாதிக்கமிக்க, இங்கிதமில்லா தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அவர் படத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

வரலட்சுமியை தங்க வைத்த ஹோட்டல் அவருக்கு பிடிக்கவில்லை. அவர் பெரிய ஸ்டார் ஹோட்டல் கேட்டார். ஹோட்டல் சரியில்லை, சாப்பாடு சரியில்லை என்றார் என சமுத்திரக்கனி கூறியதாக மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படம்

படம்

சின்ன பட்ஜெட் படம் என்பதால் தயாரிப்பாளரால் வரலட்சுமி கேட்ட ஸ்டார் ஹோட்டலில் அவரை தங்க வைக்க முடியவில்லை. இதையடுத்து வரலட்சுமி உதவி இயக்குனருடன் சண்டை போட்டு படத்தை விட்டு விலகினார் என்று சமுத்திரக்கனி கூறினாராம்.

மஹா சுபைர்

மஹா சுபைர்

ஆகாச மிட்டாயீ படத்தை மஹா சுபைர் தயாரித்து வருகிறார். வரலட்சுமி படத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் கதாபாத்திரத்தில் இனியா நடித்து வருகிறார்.

English summary
According to Malayalam media, Samuthirakani explained the real reason behind Varalakshmi Sarathkumar walking out of his Malayalam movie Akasha Mitayee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil