»   »  நாளுக்கு நாள் நயன்தாராவுக்கு மவுசு அதிகரிப்பது ஏன் தெரியுமா?

நாளுக்கு நாள் நயன்தாராவுக்கு மவுசு அதிகரிப்பது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவுக்கு ஏன் இவ்வளவு மவுசு உள்ளது என்பது குறித்து ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார்.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. இதற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது.

கதை நயன்தாராவை சுற்றி தான் நகர்கிறது.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனியர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் அவருடன் பணியாற்ற விரும்புகிறார்கள்.

ஹரிஷ் உத்தமன்

ஹரிஷ் உத்தமன்

நயன்தாரா தனது காட்சியை முடித்த கையோடு கேரவனுக்கு சென்று ஓய்வு எடுக்க மாட்டார். செட்டில் இருந்து பிறரின் காட்சிகள் படமாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பார் என்கிறார் டோரா படத்தில் அவருடன் நடித்த ஹரிஷ் உத்தமன்.

பொறுமை

பொறுமை

படப்பிடிப்பு தாமதமானால் நயன்தாரா கோபப்பட மாட்டார். மாறாக பொறுமையாக காத்திருப்பார். மேலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதை பழக்கமாக வைத்துள்ளார். இதனால் தான் நயன்தாராவை அனைவரும் புகழ்கிறார்கள் என்கிறார் ஹரிஷ்.

தாஸ்

தாஸ்

பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் காட்சிகளை சொன்னபடி நடித்துக் கொடுத்தார் நயன்தாரா என்று டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Harish Uthaman said that Nayanthara is very professional, punctual and patient when it comes to her movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil